மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் 3% அகவிலைப்படி (DA) உயர்வு? AICPI கணக்கீட்டு விவரங்கள் இதோ!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் 3% அகவிலைப்படி (DA) உயர்வு? AICPI கணக்கீட்டு விவரங்கள் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் 3% அகவிலைப்படி (DA) உயர்வு? AICPI கணக்கீட்டு விவரங்கள் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் 3% அகவிலைப்படி (DA) உயர்வு? AICPI கணக்கீட்டு விவரங்கள் இதோ!

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2022 ஜனவரி மாத தவணைக்கான அகவிலைப்படி (DA) தொகை 3% ஆக உயரும் பட்சத்தில், அவர்களின் சம்பளம் ரூ.6480 லிருந்து ரூ.90 ஆயிரமாக உயர்வை காணும் என்று தகவல்கள் பெறப்பட்டுள்ளது. இந்த கணக்கீட்டு விவரங்களை இப்பதிவில் காணலாம்.

DA உயர்வு

சுமார் 1 கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான சம்பளம் மீண்டும் உயர்வை காண இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது 2022 ஜனவரி மாதத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (DA) தொகை உயர்வை காணும் போது, இவர்கள் ஆண்டுக்கு ரூ.6480ல் இருந்து ரூ.90 ஆயிரம் வரை சம்பள உயர்வை பெறுவார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு மார்ச், 18 ஹோலி பண்டிகையை ஒட்டி வெளியாகும் என்பதை நிபுணர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

Post office இல் மாதம் ரூ.1000 முதலீடு செய்தால் ரூ.35 லட்சம் வரை ரிட்டன்ஸ் – அருமையான சேமிப்பு திட்டம்!

இப்போது 2022 ஜனவரி மாதத்திற்கான DA கணக்கீடு குறித்து நிபுணர் ஹரிசங்கர் திவாரி கூறுகையில், ‘தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு (AICPI), 2021 டிசம்பர் மாதத்திற்கான தரவுகளை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் டிசம்பரில், AICPI புள்ளிகள் 0.3 என குறைந்து 125.4 ஆக உள்ளது. நவம்பர்மாதத்தில் இது 125.7 புள்ளிகளாக இருந்தது. அதாவது நவம்பர் 2021 உடன் ஒப்பிடுகையில் தற்போது AICPI தரவு 0.24 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால் இது அகவிலைப்படி அதிகரிப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தாது.

இப்போது தொழிலாளர் அமைச்சகத்தின் AICPI IW புள்ளிவிவரங்கள் வெளிவந்த பிறகு, இந்த முறை அகவிலைப்படி தொகை 3 சதவீதம் அதிகரிக்கப்படும் என்பது தெளிவாகியுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் கோடிக்கணக்கான மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் நேரடியாக பயன்பெறுவார்கள். குறிப்பாக ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, தொழிலாளர் அமைச்சகம் நவம்பர் 2021க்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு (AICPI-IW) தரவை திருத்தி அறிவித்தது.

சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் கேப்டன் கூல் MS தோனி – கிராபிக் நாவல்! ரசிகர்கள் உற்சாகம்!

இதில், AICPI குறியீட்டு எண் நவம்பர் மாதத்தில் 0.8 சதவீதம் உயர்ந்துள்ளது. நவம்பரில் AICPI-IW 125.7 ஆக இருந்தது. அதேசமயம் 2021 அக்டோபரில் 124.9 ஆக இருந்தது. இப்போது அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுடன் ஒப்பிடுகையில் AICPI குறியீடு குறைந்திருந்தது. இதன் அடிப்படையில் 2022 ஜனவரியில் 3 சதவீதம் அகவிலைப்படி (DA) உயர்வு இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் தற்போதைய DA 31 சதவீதமாக உள்ளது. இப்போது 2022 ஜனவரி மாதத்திற்கான DA தொகை 3% ஆக உயரும் பட்சத்தில் இந்த எண்ணிக்கை 34% ஆக நிர்ணயம் செய்யப்படும்.

AICPI தரவு கணக்கீடுகளின் படி,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!