அரசு ஊழியர்களுக்கு 3 % அகவிலைப்படி & ஊதியம் உயர்வு – விரைவில் வெளியாகும் அறிவிப்பு!
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு மாத காலத்திற்குள் வெளியாகும் என்ற தகவல்கள் வந்துள்ளது.
அகவிலைப்படி:
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு நடப்பு நிதியாண்டின் 2ம் கட்ட அகவிலைப்படி உயர்வு எப்போது?கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அண்மையில் வெளியான தகவல்களின் படி தற்போது 3 (அ) 4% அகவிலைப்படி உயர்வு இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது ஊழியர்களுக்கு 42% அகவிலைப்படி வழங்கப்பட்டு வரும் நிலையில், இதன் தொடர்ச்சியாக 3% அகவிலைப்படி உயர்த்தப்பட்டு மொத்தம் 45% ஆக மாறும்.
பாதுகாப்பான வங்கியில் டெபாசிட் செய்யணுமா.. உங்களுக்காகவே RBI வெளியிட்டுள்ள பட்டியல் இதோ!
தற்போதைய பணவீக்கத்திற்கு மத்தியில் அகவிலைப்படி உயர்வு ஊழியர்களுக்கு பெரும் நிவாரணமாக இருக்கும். இன்னும் ஒரு மாத காலத்தில் இந்த 3% அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டால் ஊழியர்களுக்கு மாதம் ரூ.450 கூடுதலாக கிடைக்கும்.