மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% கூடுதல் DA உயர்வு? விரைவில் அறிவிப்பு!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% கூடுதல் DA உயர்வு? விரைவில் அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% கூடுதல் DA உயர்வு? விரைவில் அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% கூடுதல் DA உயர்வு? விரைவில் அறிவிப்பு!

மத்திய அரசுத்துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு விரைவில் 3 சதவீதம் கூடுதல் அகவிலைப்படி (DA) வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் DA அடிப்படை சம்பளத்தில் 31% ஆக உயர்த்தப்படும் என கூறப்படுகிறது.

DA அதிகரிப்பு:

சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை அதிகரித்த நிலையில் மீண்டும் 3% உயர்த்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றது. ஏற்கனவே ஜூலை 2021 முதல் மத்திய அரசு 17% லிருந்து 28% ஆக DA வை உயர்த்தியது. பண்டிகை காலத்திற்கு சில நாட்கள் முன்னதாக, மத்திய அரசு ஊழியர்கள் மீண்டும் அகவிலைப்படி உயர்வினை பெற உள்ளனர். இந்த முறை மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி (டிஏ) மற்றும் டிஆர் ஆகியவற்றில் மற்றொரு உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. மத்திய அரசு வீட்டு வாடகை கொடுப்பனவை (HRA) 24% லிருந்து 27% ஆக உயர்த்தியுள்ளது.

தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு அக்டோபரில் பள்ளிகள் திறப்பு? அறிக்கை சமர்ப்பிப்பு!

டிஏ மற்றும் டிஆரில் மேலும் 3% உயர்வை மத்திய அரசு விரைவில் அறிவிக்கலாம். இதனால் ஊதியத்துடன் டிஏ அடிப்படை சம்பளத்தில் 31% ஆக உயர்த்தப்படும். இது தொடர்பாக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடும் என்று ஊழியர் சங்கங்களும் எதிர்பார்க்கின்றன. AICPI அறிக்கை 31% விகிதத்தில் DA செலுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கின்றது. 2021 ஆம் ஆண்டின் முதல் பாதியில் டிஏ உயர்வு செப்டம்பர் மாதத்தில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

Zoho நிறுவனத்தில் 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு – புதிய அறிவிப்பு!

அதிகரித்த டிஏ செப்டம்பரில் அறிவிக்கப்பட்டால், அக்டோபர் மாத சம்பளத்துடன் வரலாம் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், செப்டம்பர் மாத சம்பளத்துடன் டிஏ உயர்வை அரசாங்கம் சேர்க்க வேண்டும் என்று ஊழியர் சங்கங்கள் கோரியுள்ளன. அதன்படி அரசு அகவிலைப்படியை 3% அதிகரித்தால், அடிப்படை சம்பளத்தில் 31% ஆக DA நிர்ணயிக்கப்படும். உதாரணமாக, ஒரு ஊழியரின் அடிப்படை ஊதியம் ரூ.20,000 என்றால், சம்பளத்தின் 3% ரூ.600 ஆக இருக்கும். அதனால், ஊழியர் ரூ.600 அதிகமாகப் பெறுவார். இந்த சூழ்நிலையில் ஒட்டுமொத்த டிஏ 31% ரூ.6200 ஆக இருக்கும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!