அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – மாணவர்கள் அச்சம்!

0
அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - மாணவர்கள் அச்சம்!
அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - மாணவர்கள் அச்சம்!
அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – மாணவர்கள் அச்சம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கொரோனா பரிசோதனையில் தற்போது 3 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு:

தமிழகத்தில் இதுவரை மூன்று கொரோனா அலைகள் பரவி மக்களை பாதிப்பு உள்ளாகி உள்ளது. முதல் அலை கடந்த 2020 மார்ச் மாதம் பரவ தொடங்கியது. இந்த வைரசால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இதனை கட்டுப்படும் நடவடிக்கையாக அரசு ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை விதித்தது. இதிலிருந்து மக்கள் மீண்டு வர முடியாமல் இருந்த நிலையில் அடுத்த தாக்குதலாக கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த டெல்டா பிளஸ் வைரஸ் வேகமெடுக்க தொடங்கியது. இதனால் ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை 30,000 வரை அதிகரித்தது. இந்த நேரத்தில் கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்தது.

TCS, Infosys, HCL ஐடி நிறுவன பணியாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – முடிவுக்கு வர இருக்கும் Work From Home!

ஆரம்பத்தில் 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டு வந்த கொரோனா தடுப்பூசி பிறகு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் செலுத்தப்பட்டது. இதனால் படிப்படியாக கொரோனா பாதிப்புகள் குறைய ஆரம்பித்தது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் கருதி அரசு ஊரடங்கில் தளர்வுகளை அளித்தது. இதனால் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டது. மேலும் கடைகள், வணிக வளாகங்கள் என அனைத்தும் வழக்கம் போல இயங்கி வருகிறது. இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இதுவரை 160 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அப்பல்கலைக்கழக மாணவர்களும், பேராசிரியர்களும் அச்சத்தில் உறைந்துள்ளனர். ஏற்கனவே ஜூன், ஜூலை மாதங்களில் கொரோனா நான்காம் அலை பரவக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்த நிலையில் தற்போது கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருவதால் நான்காம் அலை பரவி விட்டதோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here