தஞ்சாவூரில் ஷவர்மா சாப்பிட்ட 3 மாணவர்களுக்கு உடல் நலம் பாதிப்பு – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

0
தஞ்சாவூரில் ஷவர்மா சாப்பிட்ட 3 மாணவர்களுக்கு உடல் நலம் பாதிப்பு - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!
தஞ்சாவூரில் ஷவர்மா சாப்பிட்ட 3 மாணவர்களுக்கு உடல் நலம் பாதிப்பு - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!
தஞ்சாவூரில் ஷவர்மா சாப்பிட்ட 3 மாணவர்களுக்கு உடல் நலம் பாதிப்பு – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு கால்நடை மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ஷவர்மா சாப்பிட்டதில் உணவு ஒவ்வாமை ஏற்பட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஷவர்மா சாப்பிட்ட பின்னர் மயக்கம் ஏற்பட்டதை அடுத்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவ மாணவர்கள் 3 பேர் மயக்கம்:

இன்றைய காலகட்டத்தில் , வீட்டில் சமைத்து சாப்பிடுவதை விட உணவகங்களில் தான் ஏராளமானோர் சாப்பிடுகிறார்கள். எங்கு பார்த்தாலும் FAST FOOD கடைகள், அந்த கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோத தான் செய்கிறது. குறிப்பாக இளைஞர்கள் கூட்டம் தான் அதிகம். இந்நிலையில் தஞ்சை ஒரத்தநாட்டில் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் ஒரத்தநாடு பேருந்து நிலையம் அருகே உள்ள உணவகங்களில் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அதேபோல், நேற்று இரவு அந்த மாணவர்களான பிரவீன், பரிமலேஸ்வரன் , மணிகண்டன் ஆகியோர் ஒரத்தநாட்டில் உள்ள துரித உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்டு சென்ற நிலையில் அவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் போன்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை – RTE இணையதளத்தால் பெற்றோர்கள் அவதி!

இதையடுத்து 3 மாணவர்களும் சிகிச்சைக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு இரவு முழுவதும் மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் உடல் ஒவ்வாமை பாதிப்பு அதிகமானதால் மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு மாணவர்கள் 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒரத்தநாடு போலீசார் தற்போது விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்.

Exams Daily Mobile App Download

கடந்த 2 ஆம் தேதி கேரளம் மாநிலம், காசர்கோடு மாவட்டம் செருவத்தூர் நகரில் உள்ள துரித உணவுக் கடை ஒன்றில் “கெட்டுப்போனா ஷவர்மா” சாப்பிட்ட 17 வயது பள்ளி மாணவி உயிரிழந்தார், மேலும் 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து தமிழகத்தில் பல மாவட்டங்களில் உள்ள ஷவர்மா கடைகளில் கெட்டு போன இறைச்சி உள்ளதா? என உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். காஞ்சிபுரம், திருப்பூர் மாவட்டங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இதன் எதிரொலியாக மதுரை உட்பட தமிழகம் முழுவதும் நேற்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!