தமிழகத்தில் அமலாகும் 3 ஊரடங்கு கட்டுப்பாடுகள் – அரசின் முக்கிய உத்தரவு! முழு விபரம் இதோ!

0
தமிழகத்தில் அமலாகும் 3 ஊரடங்கு கட்டுப்பாடுகள் - அரசின் முக்கிய உத்தரவு! முழு விபரம் இதோ!
தமிழகத்தில் அமலாகும் 3 ஊரடங்கு கட்டுப்பாடுகள் - அரசின் முக்கிய உத்தரவு! முழு விபரம் இதோ!
தமிழகத்தில் அமலாகும் 3 ஊரடங்கு கட்டுப்பாடுகள் – அரசின் முக்கிய உத்தரவு! முழு விபரம் இதோ!

தமிழகத்தில் கொரோனா கால ஊரடங்கு கட்டுப்பாடுகள் பிப்ரவரி 15ம் தேதி வரை தான் அறிவிக்கப்பட்டிருந்தது, தற்போது மார்ச் 2ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் பல தளர்வுகளையும் அறிவித்துள்ளது.

ஊரடங்கு தளர்வுகள்:

தமிழகத்தில் கொரோனா நோய் மற்றும் அதன் மாறுபாடு அடைந்த ஓமைக்ரான் வகை வைரஸின் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு கட்டுப்பாடுகளில் அமல்படுத்தியுள்ளது. தற்போது பிப்ரவரி 15ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் உள்ள கட்டுப்பாடுகள் குறித்து தமிழக அரசு நேற்று ஆலோசனை நடத்தியது. முன்னதாக டிசம்பர் மாத இறுதியில் தான் கொரோனா 3ம் அலை பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியது. இதனால் அனைத்து கல்வி நிலையங்களும் மீண்டும் மூடப்பட்டது. வழிபாட்டு தளங்களில் பக்தர்கள் அனுமதி மறுப்பு போன்ற பல்வேறு தடைகளையும் விதித்தது.

தமிழகம் முழுவதும் பிப்.19ம் தேதி அரசு பொது விடுமுறை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ளதால் மீண்டும் அனைத்து வகுப்புகளுக்குமான பள்ளிகள் பிப்ரவரி 1ம் தேதி முதல் திறக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து 2 வருடங்களாக மழலையர் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் தான் இருந்தது. நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து முக்கிய அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறையினரும் கலந்து கொண்டனர். தற்போதைய நிலவரப்படி தினசரி 3 ஆயிரம் பேர் தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் அரசு முன்னதாக விதித்துள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்துள்ளது.

ரத்து செய்யப்பட்ட ஊரடங்கு – வழக்கம் போல் இயங்கும் இரு மாநில பேருந்து சேவை!

மார்ச் 2ம் தேதி வரை விதிக்கப்பட்டுள்ள தற்போதைய உத்தரவின் படி, சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கும் உள்ள தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 200 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும் என்றும் இறப்பு சார்ந்த நிகழ்வுகள் 100 நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தவிர மற்ற அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. மேலும், நர்சரி பள்ளிகள் மற்றும் மழலையர் விளையாட்டுப் பள்ளிகள் தமிழகத்தில் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here