தமிழக அரசு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – மாதம் 3.5 லட்ச ரூபாய் வரை ஊதியம்!

0
தமிழக அரசு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - மாதம் 3.5 லட்ச ரூபாய் வரை ஊதியம்!
தமிழக அரசு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - மாதம் 3.5 லட்ச ரூபாய் வரை ஊதியம்!
தமிழக அரசு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – மாதம் 3.5 லட்ச ரூபாய் வரை ஊதியம்!

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணி குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காண்போம்.

வேலைவாய்ப்பு:

தமிழகம் கொரோனா மூன்றாம் அலையிலிருந்து மீண்டு வரும் நிலையில் அரசு மற்றும் தனியார் துறைகள் வேலை வாய்ப்புகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்ததை அடுத்து அனைத்து மாவட்டங்களிலும் அவ்வப்போது வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்புகளை பெற்று வருகின்றனர். அதனை தொடர்ந்து அரசுத்துறை காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பும் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் உள்ள 15 காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரேஷன் அட்டைதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு – புதிதாக உறுப்பினர் பெயரை சேர்ப்பது எப்படி?

அதில் Chief Executive Officer பதவியில் ஒரு காலிப்பணியிடம் உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் MBA படித்திருக்க வேண்டும். பணியில் 15 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும். தேர்தெடுக்கப்படுபவர்களுக்கு 3 லட்சம் – 3.5 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும். Academia-Industry பதவிக்கு BE/B Tech மற்றும் MBA படித்திருக்க வேண்டும். மற்றும் 10 வருட பணி அனுபவம் அவசியம். மேலும் மாத சம்பளம் ரூ. 1.5 லட்சம் – 2.5 லட்சம் வரை வழங்கப்படும். VP – Career Portal B Tech/BE in Computer Science Engineering/ IT படித்திருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மாதம் ரூ. 1.5 லட்சம் – 2.5 லட்சம் வரை வழங்கப்படும்.

VP – Industry-Academia connect Manufacturing, Electronics, Automotive & Construction பல்கலைக்கழகத்தில் BE/B Tech அல்லது MBA படித்திருக்க வேண்டும். மற்றும் 10 வருட பணி அனுபவம் அவசியம். இப்பணிக்கு மாதத்திற்கு ரூ. 1.5 லட்சம் – 2.5 லட்சம் சம்பளம் வழங்கப்படும். AVP – Service Industry Engagement BE/B Tech அல்லது MBA படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். AVP – Portal Development & Maintenance B Tech/BE in Computer Science Engineering/ IT முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் மற்றும் பணியில் 5-7 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். AVP – Media காலியிடங்களின் எண்ணிக்கை – 1 Master’s degree in Visual Communication, Journalism, Media, Marketing படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ. 1 லட்சம் – 1.5 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும். AVP – HR & Training பல்கலைக்கழகத்தில் MBA படித்திருக்க வேண்டும் மற்றும் பணியில் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மாதத்திற்கு ரூ. 1 லட்சம் – 1.5 லட்சம் வரை ஊதியம்.

Exams Daily Mobile App Download

Senior Associates BE/B Tech அல்லது MBA படித்திருக்க வேண்டும் மற்றும் 2-3 வருட பணி அனுபவம் அவசியம். மாதத்திற்கு ரூ. 50,000 – 80,000 வரை ஊதியம் வழங்கப்படும். பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை Managing Director, Tamil Nadu Skill Development Corporation, 1st Floor, Integrated Employment office Building, Alandur Road, Thiru. Vi.Ka. Industrial Estate, Guindy, Chennai 600 032 என்ற முகவரிக்கு ஜூன் 9ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here