மத்திய அரசின் PM Kisan திட்ட கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – கிரெடிட் கார்டில் ரூ.3 லட்சம் கடன்!

0
மத்திய அரசின் PM Kisan திட்ட கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு - கிரெடிட் கார்டில் ரூ.3 லட்சம் கடன்!
மத்திய அரசின் PM Kisan திட்ட கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு - கிரெடிட் கார்டில் ரூ.3 லட்சம் கடன்!
மத்திய அரசின் PM Kisan திட்ட கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – கிரெடிட் கார்டில் ரூ.3 லட்சம் கடன்!

மத்திய அரசு விவசாயிகளுக்கு உதவும் வகையில் பிஎம் கிசான் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தற்போது இத்திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டு வழங்கப்பட உள்ளது. இந்த கிசான் கிரெடிட் கார்டில் கிடைக்கும் பலன்கள் மற்றும் அதை பெறுவதற்கான வழிமுறைகளை பற்றி பார்ப்போம்.

PM Kisan திட்டம்

மத்திய அரசு விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு வகையான நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி தற்போது கிசான் உதவித்தொகை திட்டம், கிசான் கடன் அட்டை & பயிர் காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்டவை நடைமுறையில் உள்ளது. இதன் மூலமாக பல லட்சம் விவசாயிகள் பயன் அடைந்து வருகின்றனர். மேலும் இத்திட்டத்தின் உதவியுடன் விவசாயத்திற்கு தேவையான இடு பொருட்கள் மற்றும் மற்ற வேளாண் சார்ந்த பொருட்களை வாங்கி வருகின்றனர். தற்போது பிஎம் கிசான் திட்டத்தை பற்றி விரிவாக பார்ப்போம்.

பள்ளி மாணவர்களுக்கு மே 6 முதல் ஜூலை 3 வரை கோடை விடுமுறை – அரசு அறிவிப்பு!

இந்த திட்டத்தில் ஆண்டுக்கு 3 தவணையாக ரூ.2000 என மொத்தமாக ரூ.6000 விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இதுவரை இத்திட்டத்தின் கீழ் 10 தவணை வரை உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது 11 தவணை தொகைக்காக பயனாளிகள் காத்து கொண்டிருக்கின்றனர். மேலும் இத்திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகள் தங்களின் e-KYC சரிபார்ப்பை மேற்கொண்டவர்களுக்கு 11 தவணை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.

Exams Daily Mobile App Download

தற்போது பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகளுக்கு ‘கிசான் கிரெடிட் கார்டு’ என்ற கடன் அட்டை வழங்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கென மே 1ஆம் தேதி வரை சிறப்பு முகாம் கிராம சபைகள் நடத்தப்பட்டு கடன் அட்டை இல்லதாக விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த கடன் அட்டையை பயன்படுத்தி ரூ.3 லட்சம் வரை கடன் தொகைக்கு 2 சதவீத வட்டி சலுகையும் உடனடியாக கடன் செலுத்துபவர்களுக்கு 3 சதவீத கூடுதல் வட்டி சலுகையும் கிடைக்கிறது. இதில் இணைவதற்கு பயனாளிகள் தங்களின் நிலம் தொடர்பான ஆவணங்கள், பயிர் விவரங்கள், வேறு வங்கிகளில் கடன் அட்டை பெறவில்லை என்பதற்கான ஆவணம் உள்ளிட்டவை சமர்ப்பிக்க வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here