Wipro நிறுவனத்தில் ரூ. 3.5 லட்சம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
Wipro நிறுவனத்தில் ரூ. 3.5 லட்சம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
Wipro நிறுவனத்தில் ரூ. 3.5 லட்சம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
Wipro நிறுவனத்தில் ரூ. 3.5 லட்சம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

ஐடி நிறுவனமான விப்ரோ, பொறியியல் பட்டதாரிகளுக்கான பல காலியிடங்களை அறிவித்துள்ளது. இந்த பணிக்கான தகுதிகள், காலியிடங்கள், கல்வித்தகுதி, ஊதியம் மற்றும் விண்ணப்ப விவரங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

விப்ரோ பணிவாய்ப்பு:

ஐடி நிறுவனமான விப்ரோ, பொறியியல் பட்டதாரிகளுக்கான பல வாய்ப்புகளை பற்றி அறிவித்துள்ளது. பேஷன் டெக்னாலஜி, டெக்ஸ்டைல் இன்ஜினியரிங், விவசாயம் மற்றும் உணவு தொழில்நுட்பம் தவிர அனைத்து துறைகளிலும் 2020 அல்லது 2021ல் பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது படிப்பின் இறுதி கட்டத்தில் இருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். இந்த பணிகளுக்கு ஜனவரி 31, 2022 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். விண்ணப்பங்களை விப்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதளமான  wipro.com  இன் கேரியர் பக்கத்தில் ஆன்லைனில் பூர்த்தி செய்ய வேண்டும்.

தகுதிகள்:

விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழக வழிகாட்டுதல்களின் படி குறைந்தபட்சம் 6 CGPA / 60% க்கு சமமான BE / BTech அல்லது ME / MTech பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் இந்திய குடிமக்கள் அல்லது PIO அல்லது OCI கார்டு வைத்திருப்பவர்களாக இருக்க வேண்டும். நேபாளம் மற்றும் பூட்டானைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் குடியுரிமைச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.

மறுஅறிவிப்பு வரும் வரை பள்ளிகளை மூட உத்தரவு – முதல்வர் ஆணை! ஓமிக்ரான் அச்சம் எதிரொலி!

கூடுதலாக, விண்ணப்பதாரர்கள் கடந்த 6 மாதங்களில் விப்ரோ நடத்திய தேர்வில் கலந்து கொள்ளாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பம்:

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் 12 மாத சேவை ஒப்பந்தத்தில் ரூ.75,000 ஊதியத்துடன் திட்டப் பொறியாளர்களாகப் பணியமர்த்தப்படுவார்கள். விண்ணப்பதாரர்கள் பதிவு செய்து 6 மாதங்களுக்குப் பிறகு 25,000 ரூபாய் போனஸுடன் கூடுதலாக ரூ 3.5 லட்சம் வருடாந்திர சம்பளமாக பெறுவார்கள். விண்ணப்பதாரர்கள் பதிவு செய்த நாளிலிருந்து 18, 24 மற்றும் 36 வது மாதங்களில் ஒருங்கிணைந்த போனஸ் பெறுவார்கள். இதனால் இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடைந்து கொள்ளும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!