தமிழகத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 நாட்கள் பயிற்சி – செயல்முறைகள் வெளியீடு!

0
தமிழகத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 நாட்கள் பயிற்சி - செயல்முறைகள் வெளியீடு!
தமிழகத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 நாட்கள் பயிற்சி - செயல்முறைகள் வெளியீடு!
தமிழகத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 நாட்கள் பயிற்சி – செயல்முறைகள் வெளியீடு!

தமிழகத்தில் 1 முதல் 3ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டு முதல் “எண்ணும் எழுத்தும்” என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குவதற்கான செயல்முறைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள்

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கிடையே கற்றல் இடைவெளி அதிகரித்துள்ளது. இதனால் குழந்தைகளிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை பள்ளிகள் சரி செய்வதற்காக தமிழகத்தில் 1 முதல் 3ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டு முதல் “எண்ணும் எழுத்தும்” என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக செயல்முறைகளை பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அனைத்து மாவட்ட ஆசிரியர்கள் மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

தமிழகத்தில் 10ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – தேர்வு துறை முக்கிய அறிவிப்பு!

இந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் அரசு/ அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் சார்ந்த 2ம் பருவத்திற்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. இதையடுத்து வருகிற 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி அறைக்குள் 40 நபர்கள் மட்டுமே பயிற்சி மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஓவியம், கலை மற்றும் கைவினை பொருட்கள் செய்யும் ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பொருட்களை செய்ய பயிற்சி அளிக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

இதற்கான ஏற்பாடுகளை DIET முதல்வர்கள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து எண்ணும் எழுத்தும் சார்ந்த பயிற்சிகளை ஆசிரியர்களுக்கு வருகிற அக்டோபர் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை என 3 நாட்கள் நடத்த வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து ஆசிரியர்களும் மற்றும் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இந்த பயிற்சிகள் குறித்த விவரங்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!