வாரத்தில் இனி 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுமுறை – இந்தியாவில் புது சட்டம் அமலாகுமா?

0
வாரத்தில் இனி 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுமுறை - இந்தியாவில் புது சட்டம் அமலாகுமா?
வாரத்தில் இனி 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுமுறை - இந்தியாவில் புது சட்டம் அமலாகுமா?
வாரத்தில் இனி 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுமுறை – இந்தியாவில் புது சட்டம் அமலாகுமா?

உலக நாடுகளில் அதிக வரவேற்பு பெற்று வரும் வாரத்திற்கு 4 நாட்கள் வேலை நடைமுறை, இந்தியாவில் அமலுக்கு வருமா என்று பல்வேறு தரப்பிலிருந்து கருத்துக்கள் எழுந்து உள்ளது. இந்த நடைமுறை அமலுக்கு வந்தால் ஊழியர்களின் வேலைத்திறன் அதிகாரிக்கும் என்று பலர் கூறுகின்றனர்.

வாரத்தில் 4 நாட்கள் வேலை நடைமுறை:

உலகம் முழுவதும் கொரோனா வருகைக்கு பின்னர் மக்களின் வேலை முறைகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டது. குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் அதிகமானோர் WORK FROM HOME முறையில் தான் வேலை பார்த்து வந்தனர். இந்த முறை மூலம் மக்களின் வாழ்க்கை முறையிலும், வொர்க் லைப் பேலென்ஸ்-லும் அதிகப்படியான கவனத்தையும் செலுத்த துவங்கிவிட்டோம். இந்த நிலையில் நிறுவனத்தின் பணிகள், வர்த்தகம் என எதுவும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக வேலை நாட்களை குறைத்து வேலை நேரத்தை அதிகரித்துள்ளது.

திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – மார்ச் மாத டிக்கெட் வெளியீடு!

இந்தியாவிலும் இந்த நடைமுறை அமலுக்கு வருமா என்று பல இளைஞர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த வகையில் முதல் முறையாக 2021ஆம் ஆண்டில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வாரத்திற்கு 4.5 நாள் மட்டுமே வேலை என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த புதிய விதியின் கீழ், ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமையன்று விருப்பத்திற்கு ஏற்ற நேரத்தில் வேலை செய்யலாம் மற்றும் வீட்டில் இருந்து வேலை செய்யவும் அனுமதி வழங்கப்படுகின்றன. இதனை தொடர்ந்து ஜப்பான் நாட்டில் ஜூன் 2021ல் இந்த 4 நாள் வேலை கலாச்சாரம் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது.

Post Office செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – அரசு முக்கிய அறிவிப்பு!

இந்த வகையில் நியூசிலாந்து நாட்டில் 2 வருடங்களுக்கு முன்பு இந்த நான்கு நாள் வேலை செய்யும் நடைமுறையை நாட்டின் அதிபர் ஜசிந்தா ஆர்டெர்ன் அறிமுகம் செய்தார். இந்தத் திட்டத்தை 6 வாரம் பரிசோதனை செய்த போது ஊழியர்களின் வேலைத்திறன் 20 சதவீதம் அதிகரித்தது. ஐஸ்லாந்து நாட்டில் 2015 மற்றும் 2019 ஆண்டுகளில் பல நிறுவனங்கள் 4 நாள் வேலைத் திட்டத்தை பரிசோதனை செய்தது. இதில் சிறப்பான வளர்ச்சி கண்ட நிலையில் வாரத்திற்கு 4 நாள் வேலை திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து பின்லாந்து, ஸ்பெயின், அயர்லாந்து சமீபத்தில் இப்பட்டியலில் சேர்ந்த பெல்ஜியம் ஆகிய நாடுகள் உடன் உலகில் சுமார் 8 நாடுகளில் அதிகாரப்பூர்வமாக வாரத்திற்கு 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை என்ற முறையை நடைமுறைப்படுத்தி உள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!