தமிழகத்தில் 3 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை – குஷியில் மாணவர்கள்!
தமிழகத்தில் நாளை முதல் சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய மூன்று நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
பள்ளிகளுக்கு விடுமுறை:
தமிழகத்தில் செப்டம்பர் 18ஆம் தேதி அன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தி அரசு விடுமுறை தினமாக அரசு நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் செப்டம்பர் 18ம் தேதியன்று விடுமுறை தினமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை செப்டம்பர் 16 சனிக்கிழமை மற்றும் 17ம் தேதி ஞாயிற்றுக் கிழமையும் 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் விடுமுறை ஆகும்.
ரூ.25 லட்சம் பலன்களை அள்ளித்தரும் LIC யின் சூப்பர் பிளான் – முழு விவரம் இதோ!
மூன்று நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக பள்ளி மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் 6 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு சனிக்கிழமை வகுப்பு குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும் ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய இரண்டு நாட்கள் இம்மாணவர்களுக்கு விடுமுறை தினமாக இருக்கும் என்று தெரிய வருகிறது.