முன்களப் பணியாளர்களுக்கு 2வது தவணை தடுப்பூசி – சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

0
முன்களப் பணியாளர்களுக்கு 2வது தவணை தடுப்பூசி - சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!
முன்களப் பணியாளர்களுக்கு 2வது தவணை தடுப்பூசி - சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!
முன்களப் பணியாளர்களுக்கு 2வது தவணை தடுப்பூசி – சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் விரைவாக செலுத்தப்பட்டது. இந்த முன்களப் பணியாளர்களுக்கு இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை செயலர் ராகேஷ் பூஷன் அறிவுறுத்தியுள்ளார்

கொரோனா தடுப்பூசி:

இந்தியாவில் பரவி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. கடந்த ஜனவரி முதல் தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனாவிலிருந்து தப்பிக்க தற்போது ஒரே தீர்வாக தடுப்பூசிகள் மட்டுமே உள்ளது. மத்திய அரசு தடுப்பூசிகளை நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்கி வருகிறது. முதலாவதாக 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த அரசு அனுமதித்தது.

20% காவலர்களுக்கு சுழற்சி முறையில் விடுப்பு – கமிஷனர் அறிவிப்பு!

பிறகு 18 வயது முதல் அனைவர்க்கும் தடுப்பூசிகள் இலவசமாக செலுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்த தடுப்பூசிகள் 2 டோஸ் செலுத்தி கொள்ள வேண்டும். முதல் தடுப்பூசி செலுத்திக் கொண்டு குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பிறகு 2வது டோஸ் செலுத்த வேண்டும். அரசு முன்னெச்சரிக்கையாக மருத்துவர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள், செவிலியர்கள் போன்ற முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளித்தது.

TN Job “FB  Group” Join Now

முன்களப் பணியாளர்கள் இரவு, பகல் பாராது கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் தடுப்பூசிகளை உடனே செலுத்திக் கொள்ள அரசு அறிவுறுத்தியது. மாநிலங்களில் தேசிய தடுப்பூசி கொள்கை முறையாக பின்பற்றபடுகிறதா என்பது பற்றி மாநில சுகாதார செயலாளர்களுடன் மத்திய சுகாதார செயலாளர் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது முன்களப் பணியாளர்கள் 2ம் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராகேஷ் பூஷன் அறிவுறுத்தியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

For => Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளிக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here