சென்னையில் விரைவில் 2வது விமான நிலையம் – ஒன்றிய அரசு அறிவிப்பு!

0
சென்னையில் விரைவில் 2வது விமான நிலையம் - ஒன்றிய அரசு அறிவிப்பு!
சென்னையில் விரைவில் 2வது விமான நிலையம் - ஒன்றிய அரசு அறிவிப்பு!
சென்னையில் விரைவில் 2வது விமான நிலையம் – ஒன்றிய அரசு அறிவிப்பு!

சென்னை அருகே புறநகர் பகுதியில் புதிதாக விமான நிலையம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதற்கான இடம் தேர்வு செய்வதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது புதிய விமான நிலையம் அமையப்போகும் இடம் இறுதி செய்யப்பட்டு முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

2-வது விமான நிலையம்:

விமான சேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் சென்னையில் திரிசூலம் பகுதியில் உள்ள விமான நிலையத்தை பெரும்பாலானோர் பயன்படுத்தி விமான பயணம் மேற்கொள்வதால் அந்த பகுதியில் நெரிசல் அதிகரித்துள்ளது. இதனால் சென்னைக்கு இன்னொரு விமான நிலையம் வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதன்படி சென்னை அருகே உள்ள புறநகர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க இடங்களை தேர்வு செய்ய தமிழக அரசை மத்திய அரசு கேட்டுக் கொண்டது. இதையடுத்து திருப்போரூர், படாளம், பன்னூர், பரந்தூர் ஆகிய 4 இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் விமான நிலையம் அமைக்கலாம் என தமிழக அரசு பரிந்துரை செய்தது.

Exams Daily Mobile App Download

மேலும் விமான நிலையத்திற்கு 2000 முதல் 3000 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதனால் இடத்தை தேர்வு செய்வது குறித்து டிட்கோவுடன், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் பல்வேறு கட்ட ஆலோசனைகளையும் நடத்தியது. இதையடுத்து அந்த 4 இடங்களையும் தமிழக அரசு பரிந்துரைத்து மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு விண்ணப்பித்திருந்தது. இதையடுத்து 4 இடங்களை ஆய்வு செய்யுமாறு சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இதில் பன்னூர் அல்லது பரந்தூர் ஆகியவற்றை அதிகாரிகள் தேர்வு செய்துள்ளனர்.

TNPSC குரூப் 1 தேர்வர்களுக்காக ஓர் அரிய வாய்ப்பு – முக்கிய வெளியீடு

இவை அறிக்கையாக விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த இரு இடங்களிலும் OLS எனப்படும் Obstacle Limitation Surface Survey செய்யப்பட வேண்டும். அதாவது இரு இடங்களிலும் சில சிக்கல் இருப்பதால் OLSஐ நடத்துவது கட்டாயம். இந்த சர்வே முடிவுகளை வைத்து புதிய விமான நிலையம் அமையும் இடம் இறுதி செய்யப்படும் என தகவல் வெளியானது. இந்நிலையில் சென்னையில் 2வது விமான நிலையம் பரந்தூரில் அமையவுள்ளது என்று மாநிலங்களவையில் மத்திய விமான போக்குவரத்து இணை அமைச்சர் வி.கே.சிங் பதில் அளித்துள்ளார். இறுதி செய்யப்பட்ட இடத்திற்கு மாநில அரசு இட அனுமதியை வழங்க வேண்டியுள்ளது என்று கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here