தமிழக வங்கிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள வங்கிகளுக்கு பண்டிகை தினம் காரணமாக 2 நாட்கள் விடுமுறை என்கிற அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
வங்கி விடுமுறை:
அரசு மற்றும் தனியார் வங்கிகளுக்கு எந்தெந்த நாட்கள் விடுமுறை என்கிற அறிவிப்பை ரிசர்வ் வங்கி வழங்கி வருகிறது. பொதுவாகவே, வங்கிகளுக்கு வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை தினங்களில் விடுமுறை வழங்கப்படுகிறது. அந்த வகையில் செப்டம்பர் மாதத்தில் மட்டுமே வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை தினத்தை சேர்த்து மொத்தமாக 16 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிள்ளது. அதில், தமிழகத்திற்கு மட்டும் 7 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல் காலாண்டுத்தேர்வு துவக்கம் – கல்வித்துறையின் அதிரடி அறிவிப்பு!
அதில், இன்றுடன் 5நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை முடிவடைந்த நிலையில் இன்னும் 2நாள் விடுமுறை பாக்கியுள்ளது. அதாவது, செப்டம்பர் 23 ஆம் தேதி நான்காவது சனிக்கிழமை காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, செப்டம்பர் 28 ஆம் தேதி Eid e Milad காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. எனவே, வங்கிகளுக்கு செல்ல திட்டமிட்டுருக்கும் பொதுமக்கள் இந்த விடுமுறை தினத்தை அறிந்து செல்லும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.