அஞ்சல் துறையில் 29 காலிப்பணியிடங்கள் – ரூ.34,000 சம்பளம்! விண்ணப்பிக்க டிச.5 கடைசி நாள்!

0
அஞ்சல் துறையில் 29 காலிப்பணியிடங்கள் - ரூ.34,000 சம்பளம்! விண்ணப்பிக்க டிச.5 கடைசி நாள்!
அஞ்சல் துறையில் 29 காலிப்பணியிடங்கள் - ரூ.34,000 சம்பளம்! விண்ணப்பிக்க டிச.5 கடைசி நாள்!
அஞ்சல் துறையில் 29 காலிப்பணியிடங்கள் – ரூ.34,000 சம்பளம்! விண்ணப்பிக்க டிச.5 கடைசி நாள்!

மத்திய அரசின் கீழ் இயங்கும் அஞ்சல் துறையில் தற்போது காலியாக உள்ள 29 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிப்பதற்கு வரும் டிசம்பர் 5ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த முழு விபரங்களை இந்த பதிவில் காணலாம்.

அஞ்சல் துறையில் வேலை:

நாடு முழுவதும் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி வருகிறது. அந்தவகையில் தற்போது இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள உதவி மேலாளர் மற்றும் டெக்னிக்கல் சூப்பர்வைசர் பதவிக்கான 29 பணியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும, விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை!

இந்த பணிக்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதியாக அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் அல்லது கல்வி நிறுவனத்தில் கணினி அறிவியல் துறையில் பட்டம் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் டிப்ளமோ படித்துள்ளவர்களுக்கு 1 வருடம் பணி அனுபவம் அவசியம். அதனை தொடர்ந்து வயது வரம்பாக 56 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி இதர இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – உதவித்தொகை பெறுவதற்கு தளர்வுகள்!

இந்த பணிக்கு எழுத்து தேர்வு மற்றும் டெபுடேஷன் அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க https://ccc.cept.gov.in/technicalpost என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க வரும் டிசம்பர் 5ம் தேதி கடைசி நாளாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்த மேலும் விபரங்கள் அறிய www.indiapost.gov.in அல்லது https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_21102021_CEPT.pdf என்ற லிங்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here