இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டு & சூதாட்டங்களுக்கு 28% GST? நாளை முக்கிய முடிவு!

0
இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டு & சூதாட்டங்களுக்கு 28% GST? நாளை முக்கிய முடிவு!
இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டு & சூதாட்டங்களுக்கு 28% GST? நாளை முக்கிய முடிவு!
இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டு & சூதாட்டங்களுக்கு 28% GST? நாளை முக்கிய முடிவு!

இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டுகள் மற்றும் கேசினோ சூதாட்டங்களுக்கு 28% ஜிஎஸ்டி விதிப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த முடிவு நாளை (ஜூன் 28) நடைபெறும் கூட்டத்தில் எடுக்கப்பட வாய்ப்புள்ளது.

வரி விதிப்பு

இந்தியாவில் தற்போது ஆன்லைன் விளையாட்டுகள், கேளிக்கை கூடம் ஆகியவற்றுக்கு அமலில் இருந்த 18% GST வரியை மத்திய அரசாங்கம் 28% ஆக அதிகரிப்பதற்கு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, சமீபத்தில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு கூடுதல் வரி விதிப்பு குறித்து ஆய்வு செய்த மத்திய குழு, இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பரிந்துரை செய்தது. இந்த நிலையில் மத்திய அரசின் GST கூட்டத்தில் ஆன்லைன் விளையாட்டு, கேசினோ ஆகியவற்றுக்கு 28% ஜிஎஸ்டி விதிப்பது குறித்த முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Exams Daily Mobile App Download

அதாவது, சண்டிகரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் GST கூட்டம் நாளை மற்றும் நாளை மறுநாள் (ஜூன் 28, 29) நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் குதிரை பந்தயம், ஆன்லைன் விளையாட்டு, கேசினோ சூதாட்டம் ஆகியவற்றுக்கு 28% ஜிஎஸ்டி விதிக்க அமைச்சரவை பரிந்துரை செய்ய இருப்பதாக தெரிகிறது. அதே நேரத்தில் செயற்கை முறையில் தயாரிக்கப்படும் கை மற்றும் கால்கள், குடிநீர் சுத்திகரிப்பு ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டியை குறைப்பதற்கும் முடிவு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

SBI வங்கியில் ரூ.60,000/- சம்பளத்தில் வேலை – தேர்வு கிடையாது || விரைவில் விண்ணப்பியுங்கள்..!

இதற்கிடையில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதால் மாநிலங்களுக்கு வழங்கும் இழப்பீடுகளில் மத்திய அரசின் அவகாசம் இந்த மாதத்துடன் முடிவுக்கு வருவதால் இந்த ஜிஎஸ்டி இழப்பீட்டை தொடர மாநிலங்கள் மத்திய அரசுக்கு வலியுறுத்தும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக, ஆன்லைன் விளையாட்டு மற்றும் சூதாட்டங்கள் மூலமாக உயிரிழப்பு, பண இழப்பு ஆகிய சம்பவங்கள் அரங்கேறுவதை கண்டித்து ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்பு செய்வதற்கு தடை விதித்து மத்திய ஒளிபரப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here