சென்னையில் புதிதாக 28 புதிய விளையாட்டு மைதானம் – மாநகராட்சி முடிவு!

0
சென்னையில் புதிதாக 28 புதிய விளையாட்டு மைதானம் - மாநகராட்சி முடிவு!
சென்னையில் புதிதாக 28 புதிய விளையாட்டு மைதானம் - மாநகராட்சி முடிவு!
சென்னையில் புதிதாக 28 புதிய விளையாட்டு மைதானம் – மாநகராட்சி முடிவு!

சென்னையில் ஏழை, எளிய மக்கள் பயன் பெற கூடிய வகையில் உலகத்தரம் வாய்ந்த 28 மைதானங்கள் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. மேலும் இதற்காக ரூ.29.4 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு மைதானம்:

விளையாட்டுகள் இளைஞர்களை ஊக்குவித்து சாதனையாளர்களாக மாற்றப்படுகிறது. மேலும் உடல் மற்றும் உள்ளம் வலிமையையும் அளிக்கிறது. அதனால் பள்ளிகளிலேயே இருந்தே மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் விளையாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு பல்வேறு சலுகைகளையும் நலதிட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அதனை தொடர்ந்து விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறும் வகையில் மைதானங்கள் அமைக்கும் பணியில் அரசு இறங்கி உள்ளது. அந்த வகையில் சென்னை மாநகராட்சியில் உலகத்தரம் வாய்ந்த 28 மைதானங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அம்மாநகரில் தற்போது 210 விளையாட்டு திடல்கள், 96 உடற்பயிற்சி கூடங்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. அதில் 4 இறகுப்பந்து உள் விளையாட்டரங்கம், 1 கூடைப்பந்து உள் விளையாட்டரங்கம், 2 நீச்சல் குளங்கள் பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 14 க்கும் மேற்பட்ட விளையாட்டு திடல்களில் கால்பந்து, டென்னிஸ், கைபந்து, பூ பந்து, கூடைப்பந்து போன்ற மைதானங்கள் அமைய பெற்றுள்ளது. தினசரி 50 முதல் 100 வரையிலான நபர்கள் இந்த விளையாட்டு திடல்களை பயன்படுத்தி வருகின்றனர்.

PG TRB தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

இந்நிலையில் சென்னையில் உலகத்தரத்தில் புதிதாக 28 விளையாட்டு மைதானங்கள் அமைக்க மாநகராட்சி முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்திற்காக ரூ.29.4 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்த விளையாட்டு மைதானங்களின் தோற்றமானது உலகத் தரத்தில் இருக்கும். 24 மணி நேரமும் தண்ணீர் வசதி, யுனிசெக்ஸ் கழிப்பறைகள், பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்க இடம், மைதானங்களை சுற்றி மரம் என விளையாட்டு மைதானத்தின் தோற்றம் வியக்க வைக்கும் வகையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!