அரசு பள்ளிகளில் 27,000 கவுரவ ஆசிரியர்கள் நியமனம் – கல்வித்துறை உத்தரவு!
கர்நாடகா மாநிலத்தில் துவக்க பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் பற்றாக்குறையை சரி செய்ய உடனடியாக 27000 ஆசிரியர்களை நியமனம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் நியமனம்:
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை கல்வியாண்டு தொடங்கும் முன்பு நிரப்ப கர்நாடக கல்வித்துறை முயற்சி செய்து வருகிறது. கர்நாடக அரசு துவக்க பள்ளிகளில் நடப்பு ஆண்டில் மொத்தம் 27000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. மேலும், மே 29ம் தேதி அன்று புதிய கல்வியாண்டு அங்கு தொடங்க இருக்கிறது.
TCS நிறுவன மாபெரும் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
நிரந்தர பணியாளர்களுக்கு தேர்வு நடத்தி அதன் மூலம் நியமனம் செய்வதற்கான கால அவகாசம் தற்போது இல்லை. இதனால், அரசு துவக்க பள்ளிகளுக்கான 27000 காலியிடங்களை கௌரவ ஆசிரியர்கள் மூலம் நிரப்ப கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
26ம் தேதிக்குள் குறைந்த பட்ச கல்வித்தகுதி மூலம் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்றும், ஆசிரியர் நியமனம் குறித்த விவரங்களை ஜூன் 10ம் தேதிக்குள் கல்வித்துறைக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download