தமிழக அரசு ஊழியர்களுக்கு 270 சிறப்பு விடுப்பு? முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் பெண் அரசு ஊழியர்களுக்கென்று பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயற்படுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது மாற்று கருவறை தாய் மூலமாக பெறும் குழந்தைகளை பராமரிக்கவும் சிறப்பு விடுப்பு எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சிறப்பு விடுப்பு
தமிழகத்தில் பெண் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு காலத்தில் 9 மாதங்கள் வரை சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக்கொள்ளவும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை தொடர்ந்து பெண் அரசு ஊழியர்கள் குழந்தைகளை தத்தெடுத்தாலும் அக்குழந்தைகளை பராமரிக்கவும் 270 நாட்கள் வரை சிறப்பு விடுப்பு எடுக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் பெண் ஊழியர்கள் அறுவை சிகிச்சை செய்து கொண்டால் அவர்களுக்கு 21 நாட்கள் வரை சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்றும் அரசு அனுமதி அளித்துள்ளது.
Exams Daily Mobile App Download
இதனை தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற பேரவையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மானிய கோரிக்கையின் போது, சமூக பாதுகாப்பு இயக்குனர் அவர்கள் கூறியதாவது, பெண் அரசு ஊழியர்கள் குழந்தைகளை தத்தெடுத்தாலும் அக்குழந்தைகளை பராமரிக்கவும் 270 நாட்கள் வரை சிறப்பு விடுப்பு எடுத்துக்கொள்ள அனுமதிப்பது போல மாற்று கருவறை தாய் வாயிலாக பெறும் குழந்தைகளை பராமரிக்கவும் 270 நாட்கள் சிறப்பு விடுப்பு எடுத்து கொள்ள அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
இந்தியாவில் மீண்டும் அதிகளவில் உருவெடுக்கும் கொரோனா பரவல் – சுகாதாரத்துறை ஷாக் ரிப்போர்ட்
அதன்படி, இதனை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு தற்போது பெண் அரசு ஊழியர்கள் மாற்று கருவறை தாய் வாயிலாக பெறும் குழந்தைகளை பராமரிக்க 270 நாட்கள் சிறப்பு விடுப்பு எடுத்துக் கொள்ள அனுமதித்து அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் இது தொடர்பான அரசாணையில், பெண் அரசு ஊழியர் மாற்று கருவறை தாய் வாயிலாக குழந்தை பெற சட்ட ரீதியான ஒப்பந்தம் செய்திருக்க வேண்டும். அத்துடன் அக்குழந்தை பெறப்பட்ட மருத்துவரிடம் இருந்து மருத்துவ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இதனை தொடர்ந்து இவ்விடுப்பு 2 குழந்தைகள் வரை மட்டுமே வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.