Myntra நிறுவனத்தில் 27500 பேருக்கு வேலைவாய்ப்பு – சூப்பர் அறிவிப்பு வெளியீடு! முழு விபரம் இதோ!

0
Myntra நிறுவனத்தில் 27500 பேருக்கு வேலைவாய்ப்பு - சூப்பர் அறிவிப்பு வெளியீடு! முழு விபரம் இதோ!
Myntra நிறுவனத்தில் 27500 பேருக்கு வேலைவாய்ப்பு - சூப்பர் அறிவிப்பு வெளியீடு! முழு விபரம் இதோ!
Myntra நிறுவனத்தில் 27500 பேருக்கு வேலைவாய்ப்பு – சூப்பர் அறிவிப்பு வெளியீடு! முழு விபரம் இதோ!

நாட்டின் முன்னணி ஆன்லைன் ஆடை விற்பனை நிறுவனங்களில் ஒன்றான மிந்திரா தனது 16வது என்ட் ஆப் ரீசன் சேல் என்ற அதிரடி தள்ளுபடி விற்பனையை தொடங்கியுள்ளது. இதற்காக பல்லாயிரக்கணக்கான தற்காலிக ஊழியர்களை தேர்வு செய்ய உள்ளது.

வேலைவாய்ப்பு

இந்தியாவில் தற்போது ஆன்லைன் மூலமாகவே அனைத்து பொருட்களையும் வாங்கி வருகின்றனர். இதில் குறிப்பாக அமேசான், பிளிப்கார்ட், மீசோ உள்ளிட்ட பல்வேறு வகையான நிறுவனங்கள் ஆன்லைன் மூலமாக தரமான முறையில் விற்பனை செய்து வருகின்றனர். இதில் வாடிக்கையாளர்களை கவருவதற்கு சில தள்ளுபடிகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் கீழ் செயல்படும் மிந்திரா நிறுவனம் தனது 16வது என்ட் ஆப் ரீசன் சேல் என்ற அதிரடி தள்ளுபடி விற்பனையை வருகிற ஜூன் 11ம் தேதி முதல் தொடங்க உள்ளது.

TN TRB வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – பாடத்திட்டம் குறித்த முழு விபரங்கள் இதோ!

அதனால் இந்த நேரத்தில் அதிகமான ஆர்டர்கள் குவியும். இதனை திறம்பட செய்து முடிக்க வழக்கமாக தேவைப்படும் ஊழியர்களை விட அதிக எண்ணிக்கையில் ஊழியர்கள் தேவைப்படுவார்கள். இதையடுத்து கடந்த ஆண்டு நடைபெற்ற தள்ளுபடி விற்பனையில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை தற்காலிக பணியில் அமர்த்தினர். இந்த தடவை இரண்டு மடங்கிற்கு அதிகமாக ஊழியர்கள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது பேக்கேஜ்களை வரிசைப்படுத்துதல், தரப்படுத்துதல் மற்றும் பேக்கிங் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கு பல்வேறு மையங்களில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

Exams Daily Mobile App Download

மேலும் டோர் டெலிவரி செய்வது, வாடிக்கையாளர் சேவை உள்ளிட்ட பணிகளுக்காக 4000 தற்காலிக ஊழியர்களையும் அத்துடன் சிறு மற்றும் நடுத்தர விற்பனையாளர்கள் பணியில் 5000 பேரையும் நியமிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வேர்ஹவுஸ் பணிகளுக்காக 2000 பெண்கள் மற்றும் 300 உடல் ஊனமுற்றோர் உள்ளிட்டவர்களை நியமிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த ஆண்டில் இந்நிறுவனத்தில் மொத்தமாக 27500 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக மிந்திரா சிஇஓ நந்திதா சின்ஹா அவர்கள் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!