Post office மாதம் ரூ.250 முதல் சிறப்பான சேமிப்பு திட்டங்கள் – குறைந்த முதலீட்டில் அதிக வருமானம்!

0
Post office மாதம் ரூ.250 முதல் சிறப்பான சேமிப்பு திட்டங்கள் - குறைந்த முதலீட்டில் அதிக வருமானம்!
Post office மாதம் ரூ.250 முதல் சிறப்பான சேமிப்பு திட்டங்கள் - குறைந்த முதலீட்டில் அதிக வருமானம்!
Post office மாதம் ரூ.250 முதல் சிறப்பான சேமிப்பு திட்டங்கள் – குறைந்த முதலீட்டில் அதிக வருமானம்!

இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேமிப்பு திட்டங்களில் வழங்கப்படும் வட்டி விகிதம் மற்றும் முதிர்வு தொகை உள்ளிட்டவற்றை விரிவாக பார்க்கலாம்.

சேமிப்பு திட்டங்கள்

இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இதில் முதலீடு செய்வதால் குறைந்த நாட்களில் அதிக லாபத்தை பெற முடியும். அத்துடன் வங்கிகளை காட்டிலும் அதிகளவு லாபத்தை பெற முடிகிறது. இந்த சேமிப்பு திட்டங்களில் குறைந்த முதலீடு மாதம் ரூ. 250 முதல் இந்த சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலமாக கணக்கை தொடங்க முடியும். அதனால் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் இந்த சேமிப்பு திட்டங்களில் அதிகளவு இணைகின்றனர். ஒவ்வொரு சேமிப்பு திட்டத்திலும் வழங்கப்படும் வட்டி விகிதங்கள் மாறுபடுகிறது.

PF பயனர்கள் கவனத்திற்கு – 3வது முறையாக கொரோனா முன்பணம்? முழு விளக்கம் இதோ!

தற்போது அஞ்சல் அலுவலகத்தில் உள்ள சிறப்பான சேமிப்பு திட்டங்களை பற்றி விரிவாக பார்க்கலாம். இதில் சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தில் 7.6 % வட்டி விகிதம் கிடைக்கிறது. அத்துடன் இதில் 10 வயது உட்பட்ட குழந்தைகள் வரை சேமிப்பு கணக்கை தொடங்கலாம். மேலும் இதன் முதிர்வு காலம் 21 ஆண்டுகள் ஆகும். இதன் மூலமாக கிடைக்கும் முதலீடு மற்றும் வட்டி தொகைக்கு வரி விலக்கும் வழங்கப்படுகிறது. இதில் குறைந்தபட்ச தொகையாக ரூ.250 முதல் முதலீடு செய்யலாம். அத்துடன் இதில் கிடைக்கும் முதிர்வு தொகையை பயன்படுத்தி குழந்தைகளின் எதிர்கால செலவினத்தை சுலபமாக எதிர்கொள்ள முடியும்.

2 நாட்கள் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – மாநில அரசு ஊழியர்கள் கவனத்திற்கு!

இதையடுத்து மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டத்தில் 7.4 % ஒரு ஆண்டுக்கு வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். இதில் பெறப்படும் வட்டி தொகைக்கு வரி விலக்கு சலுகையும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.1000 முதல் சேமிப்பு கணக்கை தொடங்கலாம். அடுத்ததாக பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் 7.15 % என்ற அதிகமான வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இதில் ரூ. 500 முதல் ரூ.1.5 லட்சம் வரையில் ஆண்டுதோறும் செலுத்தி கொள்ளலாம். இவ்வாறு அனைத்து சேமிப்பு திட்டங்களிலும் குறைந்த அளவில் முதலீடு செலுத்தி கொள்ளலாம் என்பதால் ஏராளமான வாடிக்கையாளர்களை அஞ்சல் துறை கொண்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here