25 ஆயிரம் சம்பளத்துடன் தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரியத்தில் வேலை – ஏப்ரல் 22 கடைசி நாள்!

0
25 ஆயிரம் சம்பளத்துடன் தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரியத்தில் வேலை - ஏப்ரல் 22 கடைசி நாள்!
25 ஆயிரம் சம்பளத்துடன் தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரியத்தில் வேலை - ஏப்ரல் 22 கடைசி நாள்!
25 ஆயிரம் சம்பளத்துடன் தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரியத்தில் வேலை – ஏப்ரல் 22 கடைசி நாள்!

தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரியத்தில் காலியாக இருக்கும் 11 காலியிடங்களை நிரப்பவுள்ளனர். இந்த விண்ணப்பங்களை விண்ணப்பிக்க ஏப்ரல் 22 தான் கடைசி நாள் என்பதால் தகுதியான விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு:

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளனர். பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் அடிப்படையில் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் என்பது கடந்த 2015ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட ஒரு திட்டமாகும். அதாவது சமூகத்தின் சில பிரிவினருக்கு மலிவு விலையில் வீடுகளை வழங்குவதே இந்த திட்டத்தின் முக்கியமான நோக்கமாகும்.

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன்‌ மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிக்கை!

தகுதியான விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. Urban planner / Tour planning specialist பணிக்கு 2 காலியிடமும், Capacity building institutional strengthening specialist பணிக்கு 2 காலியிடமும், MIS specialist பணிக்கு 5 காலியிடமும், Social development specialist பணிக்கு 1காலியிடமும், Information education and communication specialist பணிக்கு 1 காலியிடமும் உள்ளது. மேலும் டிப்ளமோ, இளநிலை பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் பணி அனுபவம் பெற்றவர்கள் இந்த வேலைவாய்ப்பு விண்ணப்பங்களை விண்ணப்பித்து அனுப்பலாம்.

தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு 25 ஆயிரம் வரை மாத சம்பளம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிகபட்ச வயது 45க்குள் இருக்க வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி அனுபவம் மற்றும் திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களது சான்றிதழ்களின் நகல்களை The Executive Engineer, (HFA cell) Tamilnadu Urban Habitat development board TNHDB Kamarajar Salai, Chennai என்கிற முகவரிக்கு அஞ்சல் அனுப்ப வேண்டும். மேலும், இது குறித்தான விவரங்களை அறிய விரும்பினால் http://www.tnscb.org/wp-content/uploads/2022/04/TNUHDB_HFA_Notification_2022.pdf என்கிற இணையதள முகவரிக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!