தமிழக அரசு ஊழியர்களுக்கு 25% போனஸ்? தொழிற்சங்கங்கள் வைத்துள்ள கோரிக்கை!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு 25% போனஸ்? தொழிற்சங்கங்கள் வைத்துள்ள கோரிக்கை!
தமிழக அரசு ஊழியர்களுக்கு 25% போனஸ்? தொழிற்சங்கங்கள் வைத்துள்ள கோரிக்கை!
தமிழக அரசு ஊழியர்களுக்கு 25% போனஸ்? தொழிற்சங்கங்கள் வைத்துள்ள கோரிக்கை!

தமிழகத்தில் வரும் அக்டோபர் 24-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு போனஸ் தொகை வழங்கப்படும். அந்த வகையில் நடப்பாண்டு 25% போனஸ் வழங்க கோரி அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போனஸ்:

தமிழக அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக அகவிலைப்படி உயர்வு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நேரத்தில் திமுகவினர் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அகவிலைப்படியை உயர்த்தி வழங்குவோம் என்று தேர்தலின் போது வாக்குறுதி அளித்தனர். அதன்படி ஆட்சிக்கு வந்தவுடன் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 17% அகவிலைப்படி 31% ஆக உயர்த்தி வழங்கப்பட்டது. இதனால் ஏராளமான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன் பெற்றனர். அதன் தொடர்ச்சியாக அண்மையில் மீண்டும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 34% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அரசு போக்குவரத்து துறை தொழிலாளர்கள் 25 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த வருடம் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் முழுமையாக பேருந்துகள் இயக்கப்படவில்லை. அத்துடன் மகளிருக்கு இலவச பயண திட்ட அறிவிப்பாலும் போக்குவரத்து துறையின் வருவாய் வெகுவாக சரிந்ததது. அதனால் கடந்த வருட தீபாவளி பண்டிகையின் போது போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு 10% போனஸ் தொகை மட்டுமே வழங்கப்பட்டது.

4% அகவிலைப்படி உயர்வு.. உச்சகட்ட சந்தோஷத்தில் அரசு ஊழியர்கள் – வரவேற்கும் மக்கள்!

Exams Daily Mobile App Download

ஆனால் இந்த ஆண்டு எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி அரசு பேருந்துகள் அனைத்தும் முழுமையாக இயக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமில்லாமல் அரசு விரைவு பேருந்துகள் மூலம் பார்சல் சேவை திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழக போக்குவரத்து துறைக்கு வருவாய் அதிகரித்துள்ளது. அதனால் ஓட்டுனர்கள், நடத்துனர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், பாதுகாவலர், உணவக ஊழியர், சரக்காளர், ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்கள் போன்றோர்களுக்கு தீபாவளி போனஸ் 25 சதவீதம் வழங்க வேண்டும். மேலும் பண்டிகை முன் பணம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!