ரயில்வே துறையில் 2,422 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு! முழு விபரம் இதோ!

0
ரயில்வே துறையில் 2,422 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பங்கள் வரவேற்பு! முழு விபரம் இதோ!
ரயில்வே துறையில் 2,422 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பங்கள் வரவேற்பு! முழு விபரம் இதோ!
ரயில்வே துறையில் 2,422 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு! முழு விபரம் இதோ!

மத்திய ரயில்வேத் துறை ஏராளமான வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது. இதனை தொடர்ந்து இத்துறையில் காலியாக உள்ள தொழில்பழகுநர் பயிற்சிக்கான இடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வேலைவாய்ப்பு

இந்தியாவில் உள்ள அரசு அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது. இந்த நிலையில் மத்திய ரயில்வே துறையில் 2422 காலிப்பணியிடத்துக்கான இடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அத்துடன் இதில் தொழில்பழகுநர் பயிற்சிக்கான இடங்களை தகுதியான நபர்கள் மூலமாக நிரப்ப உள்ளது. இப்பணியில் சேர விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

அடுத்த 64 மணிநேரத்திற்கு முழு ஊரடங்கு அமல் – அரசு அதிரடி உத்தரவு!

இதற்கு 15 வயது முதல் 24 வயது நிரம்பியவர்கள் வரை விண்ணப்பித்து கொள்ளலாம். அத்துடன் 17.01.2022 அன்று நிலவரப்படி குறைந்தபட்ச வயதாக 15 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ முடித்தவர்கள் வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். இப்பணிக்கு தகுதியின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள். இதற்கு வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்து கொள்ளலாம்.

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் https://www.rrccr.com/ என்ற இணையதள முகவரி மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். இதற்கு பதிவு செய்ய விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படுகிறது. அத்துடன் இதனை பிப்ரவரி 16ம் தேதிக்குள் விண்ணப்பித்து முடித்து இருக்க வேண்டும். மேலும் இது தொடர்பான மேலும் சில தகவல்களை பெற https://www.rrccr.com/home/home அல்லது https://www.rrccr.com/PDF-Files/Act_Appr_21-22/Act_Appr_2021-22.pdf என்ற லிங்க் கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம். வேலையில்லா இளைஞர்கள் இதற்கு விண்ணப்பித்து வேலைவாய்ப்புகளை பெற்று கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

Velaivaippu Seithigal 2022

To Download=> Mobile APPDownload செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here