இந்தியாவில் புதிதாக 2,401 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – சுகாதாரத்துறை தகவல்!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 2,401 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் குணமடைந்தோர் மற்றும் இறப்பு விகிதம் குறித்த விவரங்களையும் வெளியிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு:
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த வைரஸ் தொற்றை ஒழிக்கும் முயற்சியாக நாட்டில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த தடுப்பூசியானது மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்றிலிருந்து உடலை பாதுகாப்பதால் பாதிப்பு எண்ணிக்கை கடந்த ஆண்டை விட தற்போது குறைந்துள்ளது.
இந்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் தினந்தோறும் நாட்டின் கொரோனா பாதிப்பு நிலவரத்தை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று வெளியிட்ட அறிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 2,401 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இதனால் நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 4,46,28,828 ஆக உயர்ந்துள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட 21 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,28,895 ஆக உயர்ந்துள்ளது. அதனை தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட 26,625 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் கொரோனாவில் இருந்து மீண்டோர் விகிதம் 98.76 சதவீதமாக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்