மாநில அரசு ஊழியர்களுக்கு 24% HRA திருத்தம் & கூடுதல் சலுகை அறிவிப்பு – அரசு அதிரடி!

0
மாநில அரசு ஊழியர்களுக்கு 24% HRA திருத்தம் & கூடுதல் சலுகை அறிவிப்பு - அரசு அதிரடி!
மாநில அரசு ஊழியர்களுக்கு 24% HRA திருத்தம் & கூடுதல் சலுகை அறிவிப்பு - அரசு அதிரடி!
மாநில அரசு ஊழியர்களுக்கு 24% HRA திருத்தம் & கூடுதல் சலுகை அறிவிப்பு – அரசு அதிரடி!

முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திரப்பிரதேச மாநில அரசு பல்வேறு கட்ட கோரிகள் மற்றும் வலியுறுத்தல்களுக்கு பின்னர் அரசு ஊழியர்களுக்கு HRA திருத்தம் செய்வதாக அறிவித்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

HRA திருத்தம்

ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் கடந்த ஜனவரி 17ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட RPS உத்தரவுகளை ரத்து செய்யக் கோரி பிப்ரவரி 3ம் தேதியன்று விஜயவாடா நகருக்கு லட்சக்கணக்கான ஊழியர்கள் பேரணியாக சென்றதை அடுத்து, ஊழியர்களுக்கு HRA திருத்தம் உள்ளிட்ட சில சலுகைகளை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் சிறப்பு தலைமைச் செயலர் (நிதி) SS ராவத் பிறப்பித்த திருத்தப்பட்ட உத்தரவுகளின்படி, புது டெல்லி மற்றும் ஹைதராபாத்தில் உள்ள ஆந்திரப் பிரதேச அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அதிகபட்ச உச்சவரம்பு ரூ. 25,000 உடன் HRA 24% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

WhatsApp பயனர்கள் கவனத்திற்கு – புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அம்சங்கள்!

மேலும் அமராவதியில் உள்ள மாநிலச் செயலகம் மற்றும் ஹைதராபாத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட துறைத் தலைவர்களின் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் இது பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கையானது ஜனவரி 1, 2022 முதல் ஜூன் 2024 வரை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட மாவட்டத் தலைமையகம் மற்றும் முக்கிய நகரங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 16% HRA அதிகபட்ச உச்சவரம்பு ரூ.17,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

TNPSC கூட்டுறவுத் துறையில் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

இது தவிர 50,000 முதல் இரண்டு லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் உள்ள ஊழியர்களுக்கு 12% HRA, மற்றும் உச்சவரம்பு ரூ.13,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் மற்ற ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 10% HRA தொகை வழங்கப்படும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் 70 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு 7%, 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 12%, 80 வயதுடையவர்களுக்கு 20%, 85 வயது – 25%, 90 வயது – 30%, 95 வயது – 35% மற்றும் 100 வயதுக்கு மேற்பட்டவர்கள் 50% என்ற அடிப்படையில் கூடுதல் சலுகைகளை வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!