‘டாப் 20’ க்குள் சென்றது இந்தியா.!

0
'டாப் 20’ க்குள் சென்றது இந்தியா.!
'டாப் 20’ க்குள் சென்றது இந்தியா.!

‘டாப் 20’ க்குள் சென்றது இந்தியா.!

சீனாவில் அறிமுகமாகிய இந்த கொரோனா வைரஸ் நாடெங்கிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. சீனாவிலிருந்து பரவி இருந்தாலும் தற்போது நிலவரப்படி அமெரிக்காவே இந்த நோய்க்கு அதிகமாக பலியாகி வருகிறது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் இந்த நோய்க்கு அதிகளவில் பலியாகி உள்ளன.

தமிழ்நாட்டில் இன்று 25 பேருக்கு கொரோனா உறுதி !!!!

24 மணி நேர நிலவரம்

  1. சீனாவில் பூமிப்பந்தில் முதல் கொரோனா பாதிப்பிற்குள்ளான நாடு இது. இங்கிருந்து தான் பிற நாடுகளுக்கு கொரோனா தாவியது. சீனாவில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைகிறது. கடைசி 24 மணி நேரத்தில் 93 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு இல்லை.
  2. அமெரிக்காவில் முதல் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டு 82 நாட்கள் ஆகிவிட்டன. 24 மணி நேரத்தில் 24 ஆயிரத்து 574 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 2 ஆயிரத்து 228 பேர் மரணத்தை தழுவியுள்ளனர்.
  3. இத்தாலியில் முதல் பாதிப்பு தென்பட்டு 74 நாட்கள் ஓடிவிட்டன. இன்னும் பாதிப்பு உச்சத்தில் தான் உள்ளது. 24 மணி நேரத்தில் 2,972 பேர் புதிதாக பாதித்துள்ளனர். 602 பேர் இறந்துள்ளனர்.
  4. ஸ்பெயினில் 73 நாட்களுக்கு முன்பு முதல் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. 24 மணி நேரத்தில் 2,442 பேரை கொரோனா தாக்கியுள்ளது. 300 பேருக்கு மரணத்தை ஏற்படுத்தியுள்ளது.
  5. பிரான்ஸ் இந்த கொரோனா தோற்று ஏற்பட்டு இப்போது 81 நாட்கள் ஆகிவிட்டன. கடந்த 24 மணி நேரத்தில் 6,514 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 762 பேர் இறந்துள்ளனர். பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 275 பேரை பாதித்த கொரோனா, 782 பேருக்கு மரணத்தை தந்துள்ளது. முதல் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டு 74 நாட்கள் ஆகின்றன. இந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சனையும் கொரோனா விட்டுவைக்கவில்லை. சில நாட்களுக்கு முன்பு பாதிப்பில் இருந்து மீண்டார்.
  6. ஈரானில் கொரோனா வேட்டை துவங்கி 55 நாட்கள் ஆகின்றன. புதிதாக 1,574 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 98 பேர் பலியாகி இருக்கின்றனர்.பெல்ஜியம்இங்கு 70 நாட்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு தென்பட்டது. 24 மணி நேரத்தில் 530 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 254 பேர் இறந்துள்ளனர்.
  7. ஜெர்மனியில் கொரோனா தாண்டவம் 70வது நாளை கடந்துவிட்டது. தற்போது பாதிப்பு சற்று குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1287 பேர் பாதிக்கப்பட்டனர். இறப்பு 100. நெதர்லாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 870 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 122 பேர் இறந்துள்ளனர். பாதிப்பு ஏற்பட்டு 47 நாட்கள் ஆகின்றன.

குணமானவர்கள்

சீனாவில் 78,282 பேர், ஜெர்மனியில் 72,600 பேர், ஸ்பெயினில் 70,853 பேர், அமெரிக்காவில் 49,999 பேர், இத்தாலியில் 37,130 பேர், பிரான்ஸில் 29,121 பேர், சுவிட்சர்லாந்தில் 14,700 பேர், பிரேசிலில் 14,026 பேர், கனடாவில் 8,235 பேர் உட்பட உலகளவில் 5 லட்சத்து 717 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

‘டாப் 20’

இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு வேகமெடுத்துள்ளது. துவக்கத்தில் மிகவும் குறைவான பாதிப்புகள் உள்ள நாடாக விளங்கிய இந்தியா, வேகமாக முன்னேறி ‘டாப் -20’ நாடுகள் பட்டியலில் நுழைந்துவிட்டது. உலக அளவில் அதிக மரணங்கள் நடந்த பட்டியலில் இந்தியாவிற்கு 19வது இடம் கிடைத்துள்ளது. இவ்வேகம் தொடர்ந்தால் இந்தியாவின் நிலையும் கவலைக்கிடம் தான்.இதுவரை நம் நாட்டில் சமூகப்பரவல் இல்லை என நமது அரசு ஆறுதல் அளித்து வருகிறது. கொரோனா பரவல் சங்கிலியை நொறுக்க ஊரடங்கை மே 3 வரை பிரதமர் மோடி நீட்டித்துள்ளார்.

ரேஷன் கடைகளில் 19க்கு அதிகமான மலிவு விலை மளிகைப் பொருட்கள் – அமைச்சர் அறிவிப்பு..!

 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!