மாநில அரசு ஊழியர்களுக்கு 24 நாட்கள் விடுமுறை அறிவிப்பு – 2022 பட்டியல் வெளியீடு!

0
மாநில அரசு ஊழியர்களுக்கு 24 நாட்கள் விடுமுறை அறிவிப்பு - 2022 பட்டியல் வெளியீடு!
மாநில அரசு ஊழியர்களுக்கு 24 நாட்கள் விடுமுறை அறிவிப்பு - 2022 பட்டியல் வெளியீடு!
மாநில அரசு ஊழியர்களுக்கு 24 நாட்கள் விடுமுறை அறிவிப்பு – 2022 பட்டியல் வெளியீடு!

ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் அரசு வரும் 2022 ஆம் ஆண்டின் காலண்டர் விடுமுறை நாட்களின் பட்டியலை நேற்று வெளியிட்டது. அரசு அறிக்கையின் படி 2022 ஆம் ஆண்டில் மொத்தம் 24 அரசு விடுமுறை தினங்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை பட்டியல்:

2022 புத்தாண்டு வர இருப்பதை ஒட்டி அனைத்து மாநில, யூனியன் அரசுகளும் மற்றும் மத்திய அரசும் தனது விடுமுறை நாட்களின் பட்டியலை கடந்த மாதம் முதல் அறிவித்து வருகிறது. சம்பந்தப்பட்ட அரசு விடுமுறை அளித்துள்ள நாட்களில் குறிப்பிட்ட பகுதியின் அரசு அலுவலகங்கள், வங்கிகள், பள்ளி, கல்லூரிகள் போன்றவை விடுமுறை நாட்களாக இருக்கும். தற்போது ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் அரசு 2022 காலண்டர் ஆண்டுக்கான விடுமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி மொத்தம் 24 நாட்கள் GAD உத்தரவின் படி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பள்ளிகள் மீண்டும் மூடல்? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

விடுமுறை நாட்களின் பட்டியலை 1881 ஆம் ஆண்டு பேச்சுவார்த்தையின் கீழ் நேற்று அரசு அறிவித்தது. GAD உத்தரவின்படி பட்டியலிடப்பட்ட நாட்கள் 2022ம் ஆண்டின் பொது விடுமுறை நாட்களாக இருக்கும். மேலும், ஒரு தனி உத்தரவின் மூலம், ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் காலண்டர் ஆண்டு 2022 இல் கடைபிடிக்கப்பட வேண்டிய விடுமுறை நாட்களையும் அரசாங்கம் பட்டியலிட்டுள்ளது. மேலும் அனைத்து இஸ்லாமிய விடுமுறை நாட்களும் சந்திரனின் பிறை தோற்றத்திற்கு உட்பட்டவையாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை பட்டியல்:

  • ஜனவரி 26 – குடியரசு தினம்
  • மார்ச் 1 – மகாசிவராத்திரி
  • மார்ச் 18 -ஹோலி (ஜம்மு மாகாணத்திற்கு மட்டும்)
  • ஏப்ரல் 1 – வங்கிகள் வருடாந்திர மூடல்
  • ஏப்ரல் 2 – முதல் நவராத்திரி
  • ஏப்ரல் 14 -பைசாகி; டாக்டர் பி ஆர் அம்பேத்கரின் பிறந்த நாள்.
  • ஏப்ரல் 29 – ஜுமாத்-உல்-விடா மற்றும் ஷப்-இ-கத்ர்
  • மே 3 – ஈத்-உல்-பித்ர்
  • மே 16 -புத்த பூர்ணிமா;
  • ஜூன் 15 – குரு ஹர்கோவிந்த் ஜியின் பிறந்த நாள்;
  • ஜூலை 10 , 11 – ஈத்-உல்-அழா.
  • ஆகஸ்ட் 8 – அஷூரா
  • ஆகஸ்ட் 15 – சுதந்திர தினம்
  • ஆகஸ்ட் 19 – ஜனமாஷ்டமி
  • அக்டோபர் 2 – மகாத்மா காந்தி பிறந்த நாள்
  • அக்டோபர் 5 – தசரா
  • அக்டோபர் 8 – ஈத்-இ-மிலாதுல்-நபி
  • அக்டோபர் 14 – ஈத்-இ-மிலாத்-உல்-நபி
  • அக்டோபர் 14 – ஈத்-இ-மிலாத்-உல்-நபி
  • அக்டோபர் 26 – சேர்க்கை நாள்
  • நவம்பர் 8 – குருநானக் தேவ் ஜியின் பிறந்தநாள்
  • டிசம்பர் 25 – தேதி கிறிஸ்துமஸ்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!