2381 அரசு மழலையர் வகுப்புகள் மீண்டும் தொடக்கம் – அரசின் வழிகாட்டுதல்கள் வெளியீடு!

0
2381 அரசு மழலையர் வகுப்புகள் மீண்டும் தொடக்கம் - அரசின் வழிகாட்டுதல்கள் வெளியீடு!
2381 அரசு மழலையர் வகுப்புகள் மீண்டும் தொடக்கம் - அரசின் வழிகாட்டுதல்கள் வெளியீடு!
2381 அரசு மழலையர் வகுப்புகள் மீண்டும் தொடக்கம் – அரசின் வழிகாட்டுதல்கள் வெளியீடு!

தமிழகத்தில் முன்னதாக அரசு அங்கன்வாடி மையங்களில் செயல்பட்டு வந்த மழலையர் வகுப்புகள் போதிய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இல்லாத காரணத்தால் ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் எல்கேஜி, மற்றும் யுகேஜி வகுப்புகள் தொடங்கப்படும் என்ற அரசாணை வெளியிடப்பட்டு, அதற்கான வழிகாட்டுதல்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் வழிகாட்டுதல்கள்:

தமிழகம் முழுவதும் குழந்தைகளின் கல்விக்காக பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில், அதிக வரவேற்பை பெற்றது அரசு பள்ளிகளில் குழந்தைகளுக்கான எல்கேஜி, மற்றும் யுகேஜி வகுப்புகள் நடத்துவது தான். சிறு குழந்தைகள் மழலையர் வகுப்புகளில் அடிப்படை கல்வி மற்றும் சமூக பழக்கவழக்கங்களை பயின்று வருகின்றனர். தங்களது குழந்தைகள் பேச ஆரம்பித்த உடன் பெற்றோர் தனியார் மழலையர் வகுப்புகளில் அதிக கட்டணம் கொடுத்து சேர்த்து விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

ஆனால் ஏழ்மை நிலையில் உள்ள பெற்றோர்களின் குழந்தைகளும் இதேபோல் அடிப்படை கல்வியை பயில வேண்டும் என்று அரசு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் எல்கேஜி, மற்றும் யுகேஜி வகுப்புகளை அங்கன்வாடி மையங்களில் நடத்தியது. ஆனால் நடப்பு கல்வி ஆண்டில் போதிய மாணவர்கள் இல்லை என்று கூறி இந்த திட்டம் கைவிடப்பட்டது. தொடர்ந்து இந்த திட்டத்தை செயல்படுத்த கோரி அரசுக்கு வந்த கோரிக்கைகளின் அடிப்படையில் தற்போது மீண்டும் 2381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, மற்றும் யுகேஜி வகுப்புகளை நடத்த அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

இந்த வங்கியில் Deposit செய்துள்ளீர்களா? அப்போ நீங்க ராஜா தான் – பிக்சட் டெபாசிடுக்கு 7.75% வட்டி!

Exams Daily Mobile App Download

இந்நிலையில், எல்கேஜி, மற்றும் யுகேஜி வகுப்புகளை அங்கன்வாடி மையங்களில் நடத்துவதற்கான வழிகாட்டுதல்களையும் அறிவித்துள்ளது.

வழிகாட்டுதல்கள்:
  • எல்கேஜி, மற்றும் யுகேஜி வகுப்புகளுக்கு இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்றிய ஆசிரியர்களை தற்காலிகமாக நியமிக்கலாம்.
  • இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்றியவர்கள் போதிய அளவு இல்லாத பட்சத்தில் தகுதிவாய்ந்த ஆரம்ப கல்விக்கான படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களை நியமனம் செய்ய வேண்டும்.
  • இந்த தற்காலிக ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.5,000 வழங்கப்படும்.
  • தற்காலிக ஆசிரியர்களுக்கான பணிக்காலம் ஜூன் முதல் ஏப்ரல் வரை 11 மாதம் ஆகும்.
  • எல்கேஜி, மற்றும் யுகேஜி வகுப்புகளின் தற்காலிக ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும்.
  • இந்த தற்காலிக ஆசிரியர்களை அக்டோபர் 14ம் தேதிக்குள் தேர்வு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!