தமிழக காவல்துறையில் 2300 வரவேற்பு அதிகாரிகள் பணியிடங்கள் நிரப்புதல் – டிஜிபி சைலேந்திரபாபு முக்கிய அறிவிப்பு!

0
தமிழக காவல்துறையில் 2300 வரவேற்பு அதிகாரிகள் பணியிடங்கள் நிரப்புதல் - டிஜிபி சைலேந்திரபாபு முக்கிய அறிவிப்பு!
தமிழக காவல்துறையில் 2300 வரவேற்பு அதிகாரிகள் பணியிடங்கள் நிரப்புதல் - டிஜிபி சைலேந்திரபாபு முக்கிய அறிவிப்பு!
தமிழக காவல்துறையில் 2300 வரவேற்பு அதிகாரிகள் பணியிடங்கள் நிரப்புதல் – டிஜிபி சைலேந்திரபாபு முக்கிய அறிவிப்பு!

தமிழக அரசின் காவல்துறையில் சேர பல இளைஞர்கள் ஆவலுடன் இருந்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் புதிதாக 2300 வரவேற்பு அதிகாரிகள் நியமிக்கப்படுவதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

போலீஸ் அதிகாரிகள் நியமனம்

தமிழகத்தில் நடக்கும் குற்றங்களை தடுக்க காவல்துறை சார்பில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் டிஜிபி சைலேந்திரபாபு காவல்துறையில் பணிபுரிந்து வரும் காவலர்களுக்கு பல உத்தரவுகளை அடிக்கடி வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தமிழகத்தில் பல இளைஞர்கள் காவல்துறையில் வேலை வாய்ப்பு பெற வேண்டும் என ஆர்வத்துடன் இருக்கின்றனர். அதனால் தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் 2300 வரவேற்பு அதிகாரிகள் நியமிக்கப்படுவதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டுமா? உங்களுக்கான பதிவு தான் இது.. IRCTC வழங்கும் சேவை!

அவர் பொள்ளாச்சி அருகே ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரியில் நேற்று மாலை நடந்த வெள்ளிவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இது குறித்து அறிவித்தார். மேலும் தமிழகத்தில் பல குற்றங்கள் நடந்து வருவதாகவும், மொபைல் போனை பயன்படுத்தி வங்கி கணக்கில் பணத்தை எடுத்து விடுவதாகவும், அதிலும் பெண்களை குறி வைத்து இந்த குற்றங்கள் நடப்பதாக தெரிவித்தார். அது மட்டுமில்லாமல் லோன் ஆப் மூலமாக அதிக வட்டி கட்ட சொல்லி மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்த விழிப்புணர்வு இருந்தால் மட்டுமே குற்றங்களை தடுக்க முடியும்.

மேலும் தமிழகத்தில் காவல் பணிக்கு சமீபத்தில் 10 ஆயிரம் காவலர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி வழங்கப்பட்டது. அதே போல 1000 எஸ்ஐகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. மேலும் 600 எஸ்ஐக்களுக்கு இன்னும் சில வாரங்களில் பணி நியமனம் வழங்கப்பட இருக்கிறது. மேலும் தமிழகம் முழுவதும் போலீஸ் ஸ்டேஷனில் இனிமையாக காட்சி அளிக்க 2300 வரவேற்பு காவலர்கள் வரவேற்பு அதிகாரியாக நியமிக்கப்படுகின்றனர். இதன்மூலம், காவல்துறையின் சேவை தரம், சிறப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!