தமிழக அரசு ஊழியர்களுக்கு 23 நாட்கள் விடுமுறை அறிவிப்பு – முழு பட்டியல் இதோ!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு 23 நாட்கள் விடுமுறை அறிவிப்பு - முழு பட்டியல் இதோ!
தமிழக அரசு ஊழியர்களுக்கு 23 நாட்கள் விடுமுறை அறிவிப்பு - முழு பட்டியல் இதோ!
தமிழக அரசு ஊழியர்களுக்கு 23 நாட்கள் விடுமுறை அறிவிப்பு – முழு பட்டியல் இதோ!

வரவிருக்கும் 2022ம் ஆண்டில் தமிழக அரசு ஊழியர்களுக்கு சுமார் 23 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு விடுமுறை பட்டியலையும் இப்பதிவில் விரிவாக காணலாம்.

விடுமுறை அறிவிப்பு

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டு துவங்கும் போதும் அந்த ஆண்டிற்கான பொது விடுமுறை பட்டியல் அதற்கு முந்தைய ஆண்டிலேயே வெளியிடப்படுவது வழக்கம். அதன் படி வரவிருக்கும் 2022ம் ஆண்டிற்கான புதிய விடுமுறை பட்டியலை மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது தமிழக அரசும் ஊழியர்களுக்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன் கீழ் சுமார் 23 நாட்களுக்கு அரசு பொது விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் – முக்கிய அம்சங்கள்!

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், 23 நாட்களுக்கும் தமிழகத்திலுள்ள அனைத்து வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர வார இறுதி விடுமுறைகள், மாவட்டங்களுக்கான பொது விடுமுறைகள் அனைத்தும் இந்த பட்டியலில் இணைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது தமிழக அரசின் 2022 விடுமுறைநாட்கள் பட்டியலின் படி,

  • ஆங்கிலப் புத்தாண்டு – 1.1.2022
  • பொங்கல் – 14.01.2022
  • திருவள்ளுவர் தினம் – 15.01.2022
  • உழவர் திருநாள் – 16.01.2022
  • தைப்பூசம் – 18.01.2022
  • குடியரசு தினம் – 26.01.2022
  • வங்கிகளின் ஆண்டு கணக்கு முடிவு – 01.04.2022
  • தெலுங்கு வருடப் பிறப்பு – 02.04.2022
  • தமிழ் புத்தாண்டு, மகாவீரர் ஜெயந்தி, டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினம் – 14.04.2022
  • புனித வெள்ளி – 15.04.022
  • மே தினம் – 01.05.2022
  • ரம்ஜான் – 03.05.2022
  • பக்ரீத் – 10.07.2022
  • மொஹரம் – 09.08.2022
  • சுதந்திர தினம் – 15.08.2022
  • கிருஷ்ண ஜெயந்தி – 19.08.2022
  • விநாயகர் சதுர்த்தி – 31.08.2022
  • காந்தி ஜெயந்தி – 02.10.2022
  • ஆயுத பூஜை – 04.10.2022
  • விஜயதசமி – 05.10.2022
  • மிலாதுன் நபி – 09.10.2022
  • தீபாவளி – 24.10.2022
  • கிறிஸ்துமஸ் – 25.12.2022

    Velaivaippu Seithigal 2021

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!