22 ஆயிரம் சுகாதார ஊழியர்களை தாக்கிய கொரோனா – அதிகரிக்கும் பலி எண்ணிக்கை..!

0
22 ஆயிரம் சுகாதார ஊழியர்களை தாக்கிய கொரோனா!!!
22 ஆயிரம் சுகாதார ஊழியர்களை தாக்கிய கொரோனா!!!

22 ஆயிரம் சுகாதார ஊழியர்களை தாக்கிய கொரோனா – அதிகரிக்கும் பலி எண்ணிக்கை..!

சீனா (வுஹான்) நாட்டில் உருவான கொரோனா என்னும் வைரஸ் , உலகம் முழுவதும் பரவி உயிரிழப்பை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது . இந்தியாவிலும் தொடர்ந்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கொரோனாவால் பலியான விவரம்:

உலக முழுவதும் கொரோனா வைரஸினால் சுமார் 18 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் சுமார் 1.10 லட்சம் பேர் கொரோனா தாக்குதலுக்குப் பலியாகியிருக்கிறார்கள். அமெரிக்காவில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் சுமார் 20 ஆயிரம் பேர் இறந்திருக்கிறார்கள்.

இந்தியாவில் ஊரடங்கின் போது 12 வகையான தொழில்களுக்கு அனுமதி

இத்தாலியிலும் இறந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. ஸ்பெய்ன், பிரான்ஸ், இங்கிலாந்து என வரிசைகட்டி நிற்கும் மரணப் பட்டியல் நாளுக்குநாள் அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது. உலக நாடுகள் ஊரடங்கைத் தளர்த்தினால், கொரோனா தொற்று அதிகரிக்கும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனாவால் 22 ஆயிரம் சுகாதார ஊழியர்கள் பாதிப்பு:

கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளான வளர்ந்த நிலையில் உள்ள நாடுகள், தங்கள் நாட்டில் உள்ள ஓய்வுபெற்ற மருத்துவர்களையும் செவிலியர்களையும் மீண்டும் பணிக்கு வருமாறு அழைத்திருக்கின்றன. உலகெங்கிலும் ராணுவ வீரர்களைப் போல மருத்துவர்கள் தங்களின் நாட்டிற்காகத் தொடர்ந்து பணியாற்றிவருகிறார்கள். இத்தாலியில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளித்த நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உயிரிழந்ததாக, அந்நாட்டு தேசிய மருத்துவர் சங்கக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

மூன்று பகுதிகளாக பிரிக்கப்படும் மாநிலங்கள் – 2 ஆம் கட்ட லாக்டவுன் திட்டம் என்ன?

ஓய்வுபெற்று பணிக்குத் திரும்பிய பணியாளர்களும் இதில் வெகுவாக உயிரிழந்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.இரவு பகல் பார்க்காமல் மருத்துவமனைகளிலேயே இருக்கும் மருத்துவர்களும் செவிலியர்களும், காண்போரின் கண்களுக்கு கடவுளாகத் தெரிகிறார்கள். சீனாவில் முகக்கவசம் தடம் பதிந்த செவிலியர்களின் படங்கள் அவர்களின் அர்ப்பணிப்பை உலகிற்கு எடுத்துக்காட்டியது.52 நாடுகளில் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 52 நாடுகளில், கடந்த 8-ம் தேதி வரை பதிவான விவரம் இது எனவும், மேலும் முழுமையான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை என்பதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிக அளவில் இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!