தமிழகத்தில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

0
தமிழகத்தில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை தகவல்:

தமிழக பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும்‌ வெப்பசலனம்‌ காரணமாக மேற்கு தொடர்ச்‌சி மலைப்பகுதி மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மாவட்டங்கள்‌, டெல்டா மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கடந்த மாதம் முதல் இடி மின்னலுடன்‌ கூடிய லேசான முதல்‌ மிதமான மழை பெய்து வருகிறது. கடந்த மாதம் வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் அதிக கனமழை பெய்தது.

Post Office இல் சேமிப்பு கணக்கு தொடங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – முழு விபரங்கள் இதோ!

கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு பிறகு மார்ச் மாதத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும்‌ வெப்பசலனத்தால் கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான முதல்‌ மிதமான மழை பெய்தது. இந்த நிலையில் ஏப்ரல் 7ம் தேதி முதல் தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. அடுத்த 3 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திண்டுக்கல், தென்காசி, மதுரை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை, தஞ்சை, சேலம், நாகை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தொடர்ந்து ஓரிரு நாட்களாக இடைவிடாது பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here