தமிழகத்தில் 210 ஆர்டர்லிகள் விடுவிப்பு – காவல்துறை அறிவிப்பு!

0
தமிழகத்தில் 210 ஆர்டர்லிகள் விடுவிப்பு - காவல்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் 210 ஆர்டர்லிகள் விடுவிப்பு - காவல்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் 210 ஆர்டர்லிகள் விடுவிப்பு – காவல்துறை அறிவிப்பு!

தமிழக உயர் அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகளின் வீடுகளில் உதவிப் பணிகளை மேற்கொண்டு வந்த 210 ஆர்டர்லிகள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் அளித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் பார்க்கலாம்.

ஆர்டர்லி முறை:

இந்திய நாடு ஆங்கிலேயர்களிடம் அடிமைகளாக இருந்த கால காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஆர்டர்லி முறை இந்த ஆண்டு வரைக்கும் நாட்டில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதாவது, ஆங்கிலேயர்களின் ஆட்சியில் காவல்துறையில் ஈடுபட்டிருந்த சில இந்தியர்கள் ஆங்கிலேய உயர் அதிகாரிகளின் வீட்டு வேலைக்காக பயன்படுத்தப்பட்டிருந்தனர். இந்த முறைக்கு ஆர்டர்லி என்று பெயரிடப்பட்டிருந்தது. அந்த வகையில் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து பல ஆண்டுகள் ஆகி இருந்தாலும் காவல்துறையில் இந்த ஆர்டர்லி முறை மட்டுமே மாற்றமடையாததாக இருந்து வருகிறது.

Exams Daily Mobile App Download

எனினும் இந்த ஆர்டர்லி முறையை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்றும் அவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் அரசுக்கு பல வழிகளில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இதை தொடர்ந்து, நடப்பு ஆண்டில் அரசு அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லிகளாக பணியாற்றுபவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் அத்தகைய சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது.

TET தேர்வின் தகுதி மதிப்பெண்களில் “இவர்களுக்கு” 15% சலுகை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

இந்த நிலையில், தமிழக காவல்துறையில் உயர் அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகளின் வீடுகளில் உதவிப் பணிகளை மேற்கொண்டு வரும் சுமார் 210 ஆர்டர்லிகளை திரும்ப பெற்றுக் கொள்வதாக காவல்துறை அறிவித்துள்ளது. அதாவது, சென்னை உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் கீழ் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இருப்பினும் விடுவிக்கப்பட்ட ஆர்டர்லிகளில் 150 பேர் தங்களது காவல் பணியில் இன்னும் இணையவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here