அக்டோபர் மாதத்தில் 21 நாட்கள் வங்கி விடுமுறையா? காரணம் இது தான்!! இதை உடனே பாருங்க!

0
அக்டோபர் மாதத்தில் 21 நாட்கள் வங்கி விடுமுறையா? காரணம் இது தான்!! இதை உடனே பாருங்க!
அக்டோபர் மாதத்தில் 21 நாட்கள் வங்கி விடுமுறையா? காரணம் இது தான்!! இதை உடனே பாருங்க!
அக்டோபர் மாதத்தில் 21 நாட்கள் வங்கி விடுமுறையா? காரணம் இது தான்!! இதை உடனே பாருங்க!

இந்திய ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மாதத்திற்குரிய விடுமுறை பட்டியலை வெளியிடுவது வழக்கமாகும். இதில் அக்டோபர் மாதத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. இதனை வங்கி வாடிக்கையாளர்கள் உடனே பார்த்து வைத்துக் கொள்ளுங்கள்.

வங்கி விடுமுறை நாட்கள்

இந்தியாவில் செயல்படும் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளுக்கு தலைமை வங்கியாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கி ஆனது அனைத்து வங்கிகளுக்குமான விதிமுறைகளையும் வழிமுறைகளையும் வகுத்து வழங்குகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் விடுமுறை குறித்த பட்டியலை அனைத்து வங்கிகளுக்கும் அறிவிக்கிறது. ஆனால் இந்த விடுமுறையானது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபாடும். ஏனெனில் ஒவ்வொரு மாநிலத்திலும் சிறப்பான பண்டிகை ஒன்று கொண்டாடப்படும்.

தமிழகத்தில் 2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல் – மதுப்பிரியர்கள் அதிர்ச்சி!

அதனால் அம்மாநிலத்தில் செயல்படும் வங்கிகளுக்கு மட்டுமே வங்கி விடுமுறையானது அளிக்கப்படுகிறது. இதனால் ஒவ்வொரு மாநிலத்திடமிருந்து கருத்துக்கள் கேட்கப்பட்டு விடுமுறை பட்டியல் தயாரிக்கப்படும். இதையடுத்து வர இருக்கும் அக்டோபர் மாதத்தில் வங்கிகளுக்கு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை, தீபாவளி, தசரா, மிலாது நபி, கர்வா சவுத் உள்ளிட்ட பண்டிகை தினங்கள் உட்பட மொத்தமாக 21 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக RBI வெளியிட்ட பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

ஆனால் இந்த விடுமுறையானது இந்தியா முழுவதும் செயல்படும் அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தாது. அதாவது துர்கா பூஜையை முன்னிட்டு அக்டோபர் 3ம் தேதி அன்று திரிபுரா, ஒடிசா,சிக்கிம், மணிப்பூர், ஜார்க்கண்ட், மேகலாயா, கேரளா ஆகிய மாநிலங்களில் செயல்படும் வங்கிகளுக்கு மட்டுமே விடுமுறை அளிக்கப்படுகிறது. இதே போல் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 24ம் தேதி அன்று சிக்கிம், தெலுங்கானா, மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களை தவிர அனைத்து மாநிலத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2வது, 4வது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அளிக்கப்படும் விடுமுறையானது இந்தியா முழுவதும் செயல்படும் வங்கிகளுக்கு பொருந்தும்.

வங்கி விடுமுறை நாட்கள்:

01.10.2022 – அரை வருட கணக்கு முடிவு (சிக்கிமில் மட்டும் வங்கிகளுக்கு விடுமுறை)

02.10.2022 – காந்தி ஜெயந்தி (ஞாயிற்றுக்கிழமை)

03.10.2022 – துர்கா பூஜை ( சிக்கிம், மணிப்பூர், ஜார்க்கண்ட், மேகலாயா, கேரளா ஆகிய மாநிலங்களில் செயல்படும் வங்கிகளுக்கு மட்டுமே விடுமுறை)

04.10.2022 – தசரா பண்டிகை (அகர்தலா, கர்நாடகா,ஒரிசா, சிக்கிம், கேரளா,மஹராஷ்டிரா, மே.வங்கம், உத்தரப்பிரதேசம், பீஹார், ஜார்க்கண்ட், மேகாலயா ஆகிய மாநிலங்களில் செயல்படும் வங்கிகளுக்கு மட்டுமே விடுமுறை)

05.10.2022 – விஜயதசமி,ஆயுத பூஜை (மணிப்பூர் தவிர மற்ற மாநிலங்ளில் வங்கிகளுக்கு விடுமுறை)

06.10.2022 – சிக்கிம், கேங்டாக்கில் செயல்படும் வங்கிகளுக்கு விடுமுறை

07.10.2022 – சிக்கிம், கேங்டாக்கில் செயல்படும் வங்கிகளுக்கு விடுமுறை

08.10.2022- இரண்டாம் சனிக்கிழமை

09.10.2022 – ஞாயிற்றுக்கிழமை

13.10.2022 – கர்வா சவுத் பண்டிகை ( சிம்லாவில் செயல்படும் வங்கிகளுக்கு விடுமுறை)

14.10.2022 – ஜம்மு, ஸ்ரீநகரில் வங்கிகளுக்கு விடுமுறை

16.10.2022 – ஞாயிற்றுக்கிழமை

22.10.2022 – நான்காவது சனிக்கிழமை

23.10.2022 – ஞாயிற்றுக்கிழமை

24.10.2022 – தீபாவளி பண்டிகை (சிக்கிம், தெலுங்கானா, மணிப்பூர் தவிர மற்ற மாநிலங்ளில் வங்கிகளுக்கு விடுமுறை)

25.10.2022 – சிக்கிம், தெலுங்கானா, மணிப்பூர், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் வங்கி விடுமுறை

26.10.2022 – கோவர்த்தன் பூஜை (குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்தர்காண்ட், சிக்கிம், ஜம்மு, உத்தரப்பிரதேசம், ஹிமாச்சல், ஸ்ரீநகர் ஆகிய மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை)

27.10.2022 : சிக்கிம், மணிப்பூர், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை.

30.10.2022 – ஞாயிற்றுக்கிழமை

31.10.2022 குஜராத், பீஹார், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் வங்கிகள் செயல்படாது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!