
பிப்.1 மத்திய பட்ஜெட் தாக்கல்.. ஐடி துறைக்கு விடிவு காலம் – வரப்போகும் குட் நியூஸ்!!
இந்தியாவில் பிப். 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதனையடுத்து தகவல் தொழில்நுட்ப துறை தொடர்பாக பட்ஜெட்டில் என்ன அறிவிப்புகள் இடம்பெறவுள்ளது என்ற எதிர்பார்ப்பு ஐடி துறையினர் மத்தியில் அதிகரித்துள்ளது.
மத்திய பட்ஜெட்:
இந்தியாவில் 2023 – 2024 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தாக்கல் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பட்ஜெட் அறிக்கையில் தகவல் தொழில்நுட்பத்துறை தொடர்பாக என்ன அறிவிப்புகள் இடம்பெறவுள்ளது என்ற எதிர்பார்ப்பு ஐடி துறையினர் மத்தியில் அதிகரித்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
தற்போது பட்ஜெட்டில் இடம்பெறும் அறிவிப்புகள் குறித்த தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. அதன்படி நடப்பு ஆண்டில் இருந்து வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ. 5 லட்சமாக உயர்த்தப்படலாம் என்ற தகவல்கள் வந்துள்ளது. அதனை தொடர்ந்து ஐடி துறையினர் மத்தியிலும் பட்ஜெட் தாக்கல் அறிவிப்பு குறித்த ஆர்வம் அதிகரித்துள்ளது.
இன்றைக்கு இந்தியாவில் தொழில்நுட்பம் மற்றும் விழிப்புணர்வு இரண்டிலும் கிராமப்புற பகுதிகள் பின்தங்கியுள்ளது. மேலும் நாட்டில் இ – காமர்ஸ் தொடர்பான விதிமுறைகள் வலுவாக உள்ளது. இத்தகைய தடைகளை கலைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெறலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.