பட்ஜெட் 2023: மிடில் கிளாஸ் மக்களின் எதிர்பார்ப்புகள் என்னென்னெ? பூர்த்தி செய்யுமா மத்திய அரசு!

0
பட்ஜெட் 2023
பட்ஜெட் 2023

மத்திய அரசு பிப்ரவரி மாதம் 2023ம்  ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் நடுத்தர மக்களுக்கு பட்ஜெட் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.  இதனை மத்திய அரசு பூர்த்தி செய்யுமா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

பட்ஜெட் தாக்கல்:

நாட்டின் 2023 2024 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி அன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மூலம் தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் தாக்கல் குறித்து நிதி அமைச்சர் மற்றும் பிரதமர் நாட்டின் முக்கிய நிதி ஆலோசனை நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளனர்.

 Engineering முடித்தவர்களுக்கு SAIL நிறுவனத்தில் வேலை – 230+ காலிப்பணியிடங்கள்!

தற்போது அதிக விலைவாசி நிலவிவரும் நிலையில் மிடில் கிளாஸ் மக்கள் இந்த பட்ஜெட் தாக்கலில்  மத்திய அரசு செய்யவிருக்கும் மாற்றங்கள் குறித்து அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர். மேலும் வரி மற்றும் வட்டி விகிதங்களை குறைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமா என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

முதியோர்களின் மருத்துவ நலனிற்காக அவர்கள் பயன்படுத்தும் டயப்பர்கள், மருந்துகள், வாக்கர், சர்க்கரை நாற்காலிகள் போன்ற உபகரணங்களுக்கு விதிக்கப்படும் வரி குறைக்கப்பட வேண்டும் என்றும் முதியோர்களுக்கு அளிக்கப்படும் ஓய்வூதியம் உயர்த்தப்பட வேண்டும் என்றும் மருத்துவ கட்டணங்களுக்காக விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியில்  விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல்,  வீட்டு கடன்களுக்கு விதிக்கப்படும் வரி மற்றும் அதற்கு அளிக்கப்படும் மானியம் போன்றவை குறித்த கோரிக்கைகளும் எழுந்துள்ளது. அதிக காலம் செலுத்தும் கடன்களுக்கு விரிக்கப்படும் வரியானது குறிப்பிட்ட சதவீதம் குறைக்கப்படும் பட்சத்தில் நடுத்தர  வர்க்கத்தை சேர்ந்த அதிக அளவிலான மக்கள் சொந்த வீட்டு கனவை நினைவாக்கிக் கொள்ள முடியும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!