2023 ம் ஆண்டில் மீதமுள்ள வங்கி விடுமுறை தினங்கள் – முழு விவரம் இதோ!
2023 ஆம் ஆண்டுக்கான மீதமுள்ள மாதங்களுக்கான வங்கி விடுமுறை நாட்கள் குறித்து அதிகாரப்பூர்வ பட்டியல் விவரங்கள் இப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வங்கி விடுமுறை தினங்கள்:
ஆண்டுதோறும் வருடத்தின் தொடக்கத்திலேயே இந்திய ரிசர்வ் வங்கியானது நாடு முழுவதும் உள்ள மாநில வாரியான வங்கி விடுமுறை தினங்கள் குறித்து அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்டு விடுகிறது. மாநிலங்களுக்கு இடையே கொண்டாடப்படும் பண்டிகை மற்றும் சிறப்பு தினங்களை பொறுத்து விடுமுறை தினங்கள் வங்கிகளுக்கு மாறுபடுகிறது. இதனால் சம்பந்தப்பட்ட மாநிலங்களை சேர்ந்த மக்கள் வங்கி பணிகளை திட்டமிடுவதற்கு முன்னதாக வங்கி விடுமுறை தினங்கள் குறித்து கவனித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
மாதம் சுமார் ரூ.9,000 சம்பள உயர்வு அமல் – அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்!
தற்போது நவம்பர் மாதத்தில் தீபாவளி பண்டிகை இன்னும் சிறப்பு தினங்கள் வர உள்ளதால் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மீதமுள்ள வங்கி விடுமுறை தினங்கள் குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
விடுமுறை பட்டியல்:
11 நவம்பர் 2023 சனிக்கிழமை இரண்டாவது சனிக்கிழமை
12 நவம்பர் 2023 ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை
25 நவம்பர் 2023 சனிக்கிழமை நான்காவது சனிக்கிழமை
27 நவம்பர் 2023 திங்கட்கிழமை குருநானக்கின் பிறந்தநாள்
9 டிசம்பர் 2023 சனிக்கிழமை இரண்டாவது சனிக்கிழமை
23 டிசம்பர் 2023 சனிக்கிழமை நான்காவது சனிக்கிழமை
25 டிசம்பர் 2023 திங்கட்கிழமை கிறிஸ்துமஸ் நாள்