2022 vs 2023 Layoff ஒரு அலசல் – முன்னணி நிறுவனங்களின் அதிக அளவில் ஆட்குறைப்பு..!

0
2022 vs 2023 Layoff ஒரு அலசல் - முன்னணி நிறுவனங்களின் அதிக அளவில் ஆட்குறைப்பு..!
2022 vs 2023 Layoff ஒரு அலசல் - முன்னணி நிறுவனங்களின் அதிக அளவில் ஆட்குறைப்பு..!
2022 vs 2023 Layoff ஒரு அலசல் – முன்னணி நிறுவனங்களின் அதிக அளவில் ஆட்குறைப்பு..!

உலகளவில் பல முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 2022 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை பல ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. அந்த வகையில் பணிநீக்கம் குறித்த முழு விவரங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

பணிநீக்கம்

தற்போது நிலவி வரும் பொருளாதார மந்தநிலை காரணமாக பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் இந்த பணி நீக்கம் அதிக அளவில் அரங்கேறி வருகிறது. ஆனால் தற்போது 2023 ஆம் ஆண்டு தொடங்கி வெறும் 82 நாட்கள் மட்டுமே ஆன நிலையில், சுமார் 1.72 லட்சம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது 2022 ஆம் ஆண்டை விட அதிகம் ஆகும்.

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – இந்த மாவட்ட பொதுமக்களுக்கு மஞ்சள் அலர்ட்!

கடந்த 2022 ஆம் ஆண்டில் 1.61 லட்சம் பேர் மட்டுமே பணிநீக்கம் செய்யப்பட்டனர். ஆனால் 2023 ஆம் ஆண்டில் சுமார் 522 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணி நீங்கள் செய்துள்ளதாக அறிவித்துள்ளன. குறிப்பாக ஒவ்வொரு நாளும் 2096 ஊழியர்கள் இந்த ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.

Follow our Instagram for more Latest Updates

அதே போல 2022 ஆம் ஆண்டில் குறைபட்சம் ஒரு நாளைக்கு 153 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். ஆனால் 2023 ஆம் ஆண்டில் குறைந்தபட்சமாக சுமார் 332 பேர் ஒரு நாளில் பணிநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். முன்னணி நிறுவனங்களான அமேசான், மைக்ரோசாப்ட், மெட்டா மற்றும் Accenture ஆகிய நிறுவனங்கள் இது வரை 78 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்துள்ளது. இது அந்த நிறுவனங்களில் உள்ள மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் 45 சதவிகிதம் ஆகும். அதில் அமேசான் மட்டும் 27000 பேரையும், மெட்டா நிறுவனம் 21000 பேரையும், பணி நீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!