2022 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு – தேர்வுக்குழு அறிவிப்பு!

0
2022 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு - தேர்வுக்குழு அறிவிப்பு!
2022 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு - தேர்வுக்குழு அறிவிப்பு!
2022 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு – தேர்வுக்குழு அறிவிப்பு!

உலகின் சிறந்த பரிசாக கருதப்படும் நோபல் பரிசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022ஆம் ஆண்டில் இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக தேர்வுக்குழு அறிவித்துள்ளது.

நோபல் பரிசு

ஒவ்வொரு ஆண்டும் அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் மற்றும் மருத்துவ துறைகளில் தலை சிறந்தவர்களுக்கு உலகின் சிறந்த பரிசாக கருதப்படும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. நோபல் பரிசு என்பது ஒரு பதக்கம், சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு போன்றவை அடங்கிய தொகுப்பு. ஆண்டுதோறும் அக்டோபர் மாத தொடக்கத்தில் நோபல் பரிசு குறித்த அறிவிப்பு வெளியாகும். ஆறு நாட்களுக்கு ஆறு பரிசுகள் என அறிவிப்பு வெளியிடப்படும்.

அந்த வகையில் 2022 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது. அதன் படி 2022 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக தேர்வுக்குழு அறிவித்துள்ளது. பிரான்சின் அலியான் அஸ்பெக்ட், அமெரிக்காவின் ஜான் கிளாசர், ஆஸ்திரியாவின் ஷிலிங்கருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கலான ஃபோட்டான் சோதனை, பெல் ஏற்றத்தாழ்வுகளை மீறுதல், குவாண்டம் தகவல் அறிவியல் ஆகிய ஆராய்ச்சிக்காக 3 பேருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

கூகுள் நிறுவனம் வெளியிட்ட ஷாக்கிங் நியூஸ் – இனிமேல் இந்த வசதி கிடையாதா? அதிர்ச்சியில் பயனாளிகள்!!

நேற்று மருத்துவ விருதுடன் நோபல் பரிசு தொடங்கியது. அதனை அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக சுவீடனை சேர்ந்த ஸ்வாண்டே பாபோ பெற்றார். அதனை தொடர்ந்து, புதன்கிழமை வேதியியல் மற்றும் வியாழன் இலக்கியம் மற்றும் 2022ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெள்ளிக்கிழமையும், பொருளாதார விருது அக்டோபர் 10ஆம் தேதியும் அறிவிக்கப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!