இந்த ஆண்டின் முதல் வளைய சூரிய கிரகணம் இன்று – எங்கெல்லாம் தெரியும்?

0
இந்த ஆண்டின் முதல் வளைய சூரிய கிரகணம் இன்று - எங்கெல்லாம் தெரியும்?
இந்த ஆண்டின் முதல் வளைய சூரிய கிரகணம் இன்று - எங்கெல்லாம் தெரியும்?
இந்த ஆண்டின் முதல் வளைய சூரிய கிரகணம் இன்று – எங்கெல்லாம் தெரியும்?

இந்த ஆண்டின் முதல் வளைய சூரிய கிரகணம் இன்று மதியம் முதல் மாலை வரை நிகழ இருப்பதாகவும், வெறும் கண்களால் அதனை பார்க்க கூடாது என்றும் வானியல் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

சூரிய கிரகணம்:

நடப்பு ஆண்டின் முதல் சூரிய கிரகணம் வியாழக்கிழமையான இன்று இந்திய நேரப்படி, மதியம் 1:42 மணி முதல் மாலை 6:41 மணி வரை நிகழ இருக்கிறது. பொதுவாக சூரிய கிரகணம் மூன்று வகைகளாக நடக்கும். சூரியனின் ஒளியை முழுவதுமாக நிலவு மறைப்பது முழு சூரிய கிரகணம். சூரியனின் ஒரு பகுதியை மட்டும் நிலவு மறைப்பது பகுதி சூரிய கிரகணம். சூரியனின் விளிம்பு மட்டும் தெரியுமாறு 90% பகுதி நிலவினால் மறைக்கப்படுவது வளைய சூரிய கிரகணம் ஆகும்.

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான 2.5% கூடுதல் உள்ஒதுக்கீடு – நாளை ஆலோசனை!!

இந்த ஆண்டின் முதல் கிரகணத்தை இந்தியாவில் அருணாச்சலப் பிரதேசத்தில் மட்டுமே காண முடியும். மற்ற இடங்களில் தெரியாது. மேலும், கனடாவின் ஒரு சில பகுதிகள், கிரீன்லாந்து, ரஷியா போன்ற இடங்களிலும், அமெரிக்காவின் சில பகுதி, வடக்கு அலாஸ்கா, கனடாவின் சில பகுதிகள், ஐரோப்பா, ஆசியாவின் சில பகுதிகளில் இந்த வளைய சூரிய கிரகணம் தெரியும்.

TN Job “FB  Group” Join Now

இன்றைய கிரகணத்தின் போது, நிலவானது சூரியனை வளைய வடிவில் தொடர்ந்து 3 நிமிடங்கள் 51 வினாடிகள் மறைக்க உள்ளது. கிரகண வேளையில் சூரியனை வெறும் கண்களால் பார்க்க கூடாது. இதற்கென தயாரிக்கப்பட்ட பிரத்யேக கண்ணாடிகளையும், சூரியனை ஊசித்துளை கேமரா மூலம் விழச்செய்தும் சூரிய கிரகணத்தை காணலாம். இந்த அரிய நிகழ்வினை மாணவர்கள் மற்றும் பொதுமக்களும் இணையதளம் மூலமாக கண்டுகளிக்கலாம் என்று வானியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!