93வது ஆஸ்கர் விருதுகள் 2021 அறிவிப்பு – முழு விபரம்!!

0
93வது ஆஸ்கர் விருதுகள் 2021 அறிவிப்பு - முழு விபரம்!!
93வது ஆஸ்கர் விருதுகள் 2021 அறிவிப்பு - முழு விபரம்!!
93வது ஆஸ்கர் விருதுகள் 2021 அறிவிப்பு – முழு விபரம்!!

உலகளவில் திரைத்துறைக்கு வழங்கப்படும் ஆஸ்கர் விருதுகளில், 93-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ், கலிஃபோர்னியாவில் இருக்கும் ஹாலிவுட்டின் டால்பி தியேட்டரில் இந்த ஆண்டு நடைபெற்றது.

ஆஸ்கர் விருதுகள்:

ஆஸ்கர் விருதுகள் அமெரிக்காவில் திரைத்துறைக்கு வழங்கப்படும் மிக முக்கிய விருதாகும். மேலும் உலகிலேயே அதிகமாக தொலைக்காட்சி மூலமாக பார்வையிடும் விருது வழங்கும் விழாக்களில் ஒன்றாகும். 1929 ஆம் ஆண்டு முதல் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டு 93வது விருது விழா நேற்று நடைபெற்றது.

TN Job “FB  Group” Join Now

இந்த விழா வழக்கமாக நடைபெறும் லாஸ் ஏஞ்சல்ஸ், கலிஃபோர்னியாவில் இருக்கும் ஹாலிவுட்டின் டால்பி தியேட்டரில் மட்டுமல்லாமல் லாஸ் ஏஞ்சல்ஸின் யூனியன் ஸ்டேஷன் அரங்கிலும் நடைபெற்றது. வழக்கமாக நடைபெறுவது போல் இல்லாமல் இந்த ஆண்டு இந்த விழா எளிமையான முறையில் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி நடத்தப்பட்டது.

நாடு முழுவதும் 18+ வயதினருக்கு கொரோனா தடுப்பூசி – ஏப்ரல் 28 முதல் விண்ணப்ப பதிவு!!

இந்திய நேரப்படி காலை 5.30 மணிக்கு துவங்கப்பட்ட இந்த விழாவில் பல்வேறு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு குறிப்பாக சின பெண் இயக்குனர் க்ளோயி சாவ் இயக்கிய நோமேட்லேண்ட் படம் 3 ஆஸ்கர் விருதுகளை பெற்றுள்ளது. சிறந்த இயக்குனர், சிறந்த படம், சிறந்த நடிகை என இந்த படம் பல விருதுகளை தட்டி சென்றுள்ளது.

பாரதியார் பல்கலை செமஸ்டர் தேர்வு அட்டவணை 2021 – வெளியீடு!!

மேலும் ஆஸ்கர் விருதுகளை பெற்ற படங்களின் பட்டியல் இதோ,

  • சிறந்த துணை நடிகர் – டேனியல் கலுயா (யூதாஸ் அண்ட் பிளாக்மிசியா திரைப்படத்திற்காக)
  • சிறந்த இயக்குநர் – க்ளோயி சாவ் (நோமேன்லேண்ட் என்ற திரைப்படத்திற்காக)
  • சிறந்த திரைக்கதை – பிராமிசிங் யங் உமன்
  • சிறந்த தழுவல் திரைக்கதை – ஃபாதர்
  • சிறந்த ஆடை வடிவமைப்பு – ஆன் ராத் (மா ரெய்னீஸ் பிளாக் பாட்டம் திரைப்படத்திற்காக)
  • சிறந்த வெளிநாட்டு திரைப்படம் – அனதர் ரவுண்ட் (டென்மார்க்)
  • சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் – செர்ஜியோ லோபஸ் நிவேரா, மியா நில், ஜமிகா வில்சன்
  • சிறந்த அனிமேஷன் குறும்படம் – இஃப் எனிதிங் ஹேப்பன்ஸ் ஐ லவ் யூ
  • லைவ் ஆக்ஷன் குறும்படம் – ட்ரூ டிஸ்டேண்ட் ஸ்ட்ரேஞ்சர்
  • முழுநீள அனிமேஷன் படம் – சோல்
  • சிறந்த ஒலி அமைப்பு – சவுண்ட் ஆஃப் மெட்டல்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!