2021 நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு – தேசிய தேர்வு முகமை!

0
2021 நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு - தேசிய தேர்வு முகமை!
2021 நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு - தேசிய தேர்வு முகமை!
2021 நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு – தேசிய தேர்வு முகமை!

செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெற உள்ள நடப்பாண்டு நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

நீட் தேர்வு:

தேசிய தகுதி மற்றும் மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வு வருடத்திற்க்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்படுகிறது. நீட் தேர்வில் தேர்வானவர்கள் மட்டுமே இளங்கலை மருத்துவ படிப்பில் அனுமதிக்கப்படுவார்கள். நீட் தேர்வு உலகத்திலேயே நடக்கும் மிகப்பெரிய தேர்வாகும். ஆண்டு தோறும் 16 லட்சம் பேர் இத்தேர்வை எழுதுகின்றனர். கொரோனா அச்சம் காரணமாக நீட் நுழைவு தேர்வு நடப்பாண்டில் வழக்கத்தை விட தாமதமாக நடத்தப்படுகிறது. நடப்பு ஆண்டில் நீட் தேர்வு செப்டம்பர் 12ம் தேதி நடக்க இருக்கிறது.

தமிழகத்தில் விரைவில் பாங்க் ஆப் தமிழ்நாடு தொடங்கப்படும் – எம்.பி.அப்துல்லா தகவல்!

நடப்பாண்டு நீட் தேர்வில் வினாத்தாள் முறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரபூர்வ தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2021 நீட் தேர்வில், இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகிய நான்கு பாடங்கள் உள்ளது. ஒவ்வொரு பாடத்திலும், பலதேர்வு அடிப்படையிலான வினாக்கள் இரண்டு பிரிவுகளாக மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கொடுக்கப்பட்டிருக்கும். 2021 நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க பல முறை கால அவகாசம் நீடிக்கப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

இறுதியாக மாணவர்களின் தொடர்ச்சியான கோரிக்கையின் பேரில் விண்ணப்ப கட்டணம் செலுத்த ஆகஸ்ட் 15 ம் தேதி இரவு 11: 50 வரை அவகாசம் நீடிக்கப்பட்டது. தொடர்ந்து விண்ணப்பங்களில் உள்ள மாற்றங்களை செய்வதற்கும் அவகாசம் அளிக்கப்பட்டது. விரைவில் தேர்வு நுழைவு சீட்டு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று 2021ம் ஆண்டு நீட் தேர்வுக்கான நுழைவு சீட்டு இன்று தேசிய தேர்வு முகாமையால் வெளியிடப்பட்டுள்ளது. நுழைவு சீட்டை மாணவர்கள் neet.nta.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Admit Card 2021

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!