MTC, Exigo JV நிறுவனங்களில் 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு – இளைஞர்கள் கவனத்திற்கு!

0
MTC, Exigo JV நிறுவனங்களில் 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு - இளைஞர்கள் கவனத்திற்கு!
MTC, Exigo JV நிறுவனங்களில் 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு - இளைஞர்கள் கவனத்திற்கு!
MTC, Exigo JV நிறுவனங்களில் 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு – இளைஞர்கள் கவனத்திற்கு!

கூட்டு நிறுவனங்களான எம்டிசி எக்சிகோ மறுசுழற்சி பிரைவேட் லிமிடெட் பெங்களூரு மற்றும் சென்னையில் மார்ச் 2022க்குள் அதிக முதலீடுகளை செய்ய திட்டமிட்டுள்ளன. இதனால் புதிதாக 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு:

கொரோனா பெருந்தொற்றின் தீவிர பாதிப்பினால் பாதிக்கப்பட்டிருந்த நாட்டின் பொருளாதாரம் சமீப காலமாக மீண்டு வருகின்றது. இதனால் நாடு முழுவதும் பல நிறுவனங்கள் பல ஆயிரம் கோடிகளில் புதிய முதலீடுகளை செய்ய முன்வந்துள்ளனர். இதனால் நாட்டில் புதிய வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்படுகின்றது. இதனால் நாட்டின் வேலைவாய்ப்பின்மை குறைந்து விடும். அந்த வகையில் மெட்டல் ஸ்கிராப் செயலி எம்டிசி குழு மற்றும் இ- கழிவு மறுசுழற்சியில் ஈடுபட்டுள்ள கூட்டு நிறுவனங்களான எம்டிசி எக்சிகோ மறுசுழற்சி பிரைவேட் லிமிடெட் (எம்இஆர்பிஎல்) புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

இ-சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூல்? மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

அதில் நிறுவனங்கள் பெங்களூரு மற்றும் சென்னை நகரங்களில் மார்ச் 2022க்குள் புதிய ஆலைகளை தொடங்குவதாகவும், இதனால் ஒவ்வொரு கிளையிலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் 1000 பேருக்கு மேல் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் 250 கோடி ரூபாய் முதலீடுகளை செய்ய திட்டமிட்டுள்ளது. மின் கழிவு சுற்றுச்சூழல் அமைப்பில் அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக இருப்பதற்காக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. மேலும் NCR, ஹைதராபாத், அகமதாபாத், கொல்கத்தா மற்றும் லக்னோ உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நகரங்களில் தங்களின் கிளைகளை விரிவுபடுத்தவும், ஆண்டுதோறும் 2 லட்சம் டன் மின் கழிவுகளை பதப்படுத்தவும் வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளது.

TNPSC தேர்விற்கு விண்ணப்பிப்போர் கவனத்திற்கு – மாற்றுத்திறனாளிகளுக்கான வழிகாட்டுதல்கள்!

இது குறித்து எக்ஸிகோ மறுசுழற்சி பிரைவேட் லிமிடெட் தலைமை நிர்வாக அதிகாரி ஏஎல்என் ராவ் அவர்கள், சுமார் 2,000க்கும் அதிகமானவர்கள் வேலைவாய்ப்பினை பெற முடியும் என்று கூறியுள்ளார். ஐ.நா.வின் உலகளாவிய மின்-கழிவு கண்காணிப்பு 2020ன் படி, சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா உலகின் மூன்றாவது பெரிய மின்னணு கழிவு உற்பத்தியை செய்கிறது. மூன்று நாடுகளும் சேர்ந்து 2019 ஆம் ஆண்டில் உலகளவில் உருவாக்கப்பட்ட மொத்த 53.6 மில்லியன் டன் மின் கழிவுகளில் இந்தியா 38% அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!