2000 ரூபாய் நோட்டுகள் புழக்கம் & அச்சிடுதல் – மத்திய அரசு புதிய தகவல்!!

0
2000 ரூபாய் நோட்டுகள் புழக்கம் & அச்சிடுதல் - மத்திய அரசு புதிய தகவல்!!
2000 ரூபாய் நோட்டுகள் புழக்கம் & அச்சிடுதல் - மத்திய அரசு புதிய தகவல்!!
2000 ரூபாய் நோட்டுகள் புழக்கம் & அச்சிடுதல் – மத்திய அரசு புதிய தகவல்!!

2000 ரூபாய் நோட்டுகள் கடந்த 2 வருடங்களாக அச்சிடப்படவில்லை என மத்திய நிதித்துறை அமைச்சர் மக்களவையில் எழுத்துப் பூர்வமாக விளக்கம் அளித்துள்ளார். ரூ.2000 நோட்டுகள் செல்லாது என சில மாதங்களுக்கு முன்னர் வதந்திகள் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மத்திய அரசு தகவல்:

இந்தியாவில் கடந்த 2016ம் ஆண்டு மத்திய அரசு சார்பில் ரூ.500 மற்றும் ரூ.1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இந்த பணமதிப்பிழப்பு கொள்கையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதன் பின்னர் புது ரூ.2000, ரூ.500, ரூ.200 நோட்டுகள் படிப்படியாக வெளியிடப்பட்டன. 2000 ரூபாய் நோட்டுகள் கருப்புப்பண பதுக்கலுக்கு அதிகளவில் வழிவகுப்பதாகவும், இதனால் இது விரைவில் தடை செய்யப்பட உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வதந்திகள் வேகமாக பரவின.

தமிழக நிறுவனங்களுக்கு ஏப்ரல் 6ல் ஊதியத்துடன் விடுமுறை – தொழிலாளர் ஆணையர் உத்தரவு!!

ஆனால் இதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவையில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் அவர்களிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் எழுத்துப் பூர்வமாக பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில், ரூ.2000 மதிப்புள்ள 3,362 லட்சம் தாள்கள் 2018 மார்ச் 30 அன்று புழக்கத்தில் இருந்தன.

TN Job “FB  Group” Join Now

பிப்ரவரி 26, 2021 நிலவரப்படி, ரூ.2,000 நோட்டுகளின் 2,499 லட்சம் தாள்கள் புழக்கத்தில் இருந்தன. 2016-17 நிதியாண்டில் (ஏப்ரல் 2016 முதல் மார்ச் 2017 வரை) ரூ.2,000 3,542.991 லட்சம் நோட்டுகள் அச்சிடப்பட்டதாக ரிசர்வ் வங்கி 2019 ல் கூறியிருந்தது.

தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் விடுமுறை – பெற்றோர்கள் எதிர்பார்ப்பு!!

இருப்பினும், 2017-18 ஆம் ஆண்டில், 111.507 லட்சம் நோட்டுகள் மட்டுமே அச்சிடப்பட்டன. இது 2018-19ஆம் ஆண்டில் மேலும் 46.690 லட்சம் நோட்டுகளாகக் குறைக்கப்பட்டது. ஏப்ரல் 2019 முதல் புதிய ரூ.2,000 தாள்கள் அச்சிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் நாட்டில் 2,000 ரூபாய் நோட்டுக்களின் பயன்பாடு படிப்படியாக குறைந்து வருவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here