மத்திய அரசு வழங்கும் ரூ.2000 உதவித்தொகை – விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு!

0
மத்திய அரசு வழங்கும் ரூ.2000 உதவித்தொகை - விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு!
மத்திய அரசு வழங்கும் ரூ.2000 உதவித்தொகை - விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு!
மத்திய அரசு வழங்கும் ரூ.2000 உதவித்தொகை – விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு!

பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உதவி பணம் வழங்கும் திட்டத்தின் ஒன்பதாவது தவணை பணம் ஆகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பிஎம் கிசான் திட்டம்:

நாட்டில் நலிந்த விவசாயிகளுக்கு பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் மூலம் ஆண்டு தோறும் 3 தவணையாக ரூ.6,000 நிதி உதவி வழங்கப்படும். மத்திய அரசு விவசாயிகளின் நேரடி வங்கி கணக்கில் இந்த தொகையை வழங்கும். கொரோனா காலத்தில் விவசாயிகளுக்கு உதவும் விதமாக விரைவில் நிதி வழங்க இருப்பதாக அரசு அறிவித்தது. அதன் படி, வழங்கியும் வருகிறது.

தமிழக அரசு வழங்கும் இலவச தையல் இயந்திரம் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

பிஎம் கிசான் திட்டத்தின் எட்டாவது தவணைப் பணத்தை சுமார் 10 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மத்திய அரசு சமீபத்தில் தான் டெபாசிட் செய்தது. தற்போது 9 தவணை பணம் ஆகஸ்ட் மாதத்தில் வழங்க இருப்பதாகவும், ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையில் தகுதியுடைய விவசாயிகள் விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் தங்களது விவரங்களை தவறாக பதிவு செய்தவர்களுக்கு பணம் வந்து சேருவதில் சிக்கல்கள் உள்ளது.

TN Job “FB  Group” Join Now

எனவே, ஆதார் எண், வங்கிக் கணக்கு எண் போன்ற விவரங்களைப் பதிவிடும் போது கவனமாக இருக்க வேண்டும். முதலில் pmkisan.gov.in என்ற தளத்திற்கு செல்ல வேண்டும். அதில், ’farmers corner’ என்பதை கிளிக் செய்து Edit Aadhaar Details என்பதை கிளிக் செய்து உங்களது ஆதார் நம்பரைப் பதிவிட்டு கேப்ட்சா குறியீட்டையும் உள்ளிட்டு Submit கொடுக்க வேண்டும். இதில் உங்களது விவரங்கள் தவறாக பதிவிட்டிருந்தால் அதனை நாம் திருத்திக் கொள்ளலாம். வேறு ஏதேனும் விவரங்கள் தவறாக இருந்தால் வேளாண் துறை அலுவலகத்திற்கு சென்று அதனை சரி செய்ய வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!