தமிழகத்தில் புதிதாக 2000 மருத்துவர்கள் நியமனம் – அமைச்சர் தகவல்!

0
தமிழகத்தில் புதிதாக 2000 மருத்துவர்கள் நியமனம் - அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் புதிதாக 2000 மருத்துவர்கள் நியமனம் - அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் புதிதாக 2000 மருத்துவர்கள் நியமனம் – அமைச்சர் தகவல்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க புதிதாக 2000 மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மருத்துவர்கள் நியமனம்:

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த 2020ம் ஆண்டை ஒப்பிடுகையில் தற்போது கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் விகிதம் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. இதனை தடுத்து கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் மக்கள் பாதுகாப்பு நலன் கருதி தற்போது தளர்வுகள் அடங்கிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது.

தமிழகத்தில் மின்கட்டணம் செலுத்த காலஅவகாசம் நீட்டிப்பு? முதல்வருக்கு கோரிக்கை!!

மேலும் மாவட்டங்கள் தோறும் கொரோனா சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனைகளில் பற்றாக்குறை ஏற்படாத வகையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். தற்போது அந்த வகையில் தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மேலும் புதிதாக 2000 மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

கோகோ-கோலாவை துவம்சம் செய்த ரொனால்டோ – பல ஆயிரம் கோடிகள் இழப்பு!

அதேபோல் கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவ சேவையாற்ற புதிதாக 6000 செவிலியர்களுக்கு தமிழகத்தில் பணி நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வருகிற 21ம் தேதி முதல் தளர்வுகள் அடங்கிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வரும் நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு ஊரடங்கு நீட்டிப்பு அல்லது தளர்வுகள் குறித்து அறிவிப்பார் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!