தமிழகத்தில் ரூ.2000 மற்றும் மளிகை பொருட்கள் விநியோகம் – கள நிலவரம்!

0
தமிழகத்தில் ரூ.2000 மற்றும் மளிகை பொருட்கள் விநியோகம் - கள நிலவரம்!
தமிழகத்தில் ரூ.2000 மற்றும் மளிகை பொருட்கள் விநியோகம் - கள நிலவரம்!
தமிழகத்தில் ரூ.2000 மற்றும் மளிகை பொருட்கள் விநியோகம் – கள நிலவரம்!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ரேஷன் கடைகளிலும் இன்று கொரோனா நிவாரண தொகை ரூபாய் 2000 மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

நிவாரண பொருட்கள் மற்றும் தொகை :

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்களுக்கு உதவும் வகையில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ரேஷன் கடைகள் மூலம் கொரோனா நிவாரண தொகையாக ரூ.4000 வழங்கப்படும் என அறிவித்தார். மேலும் 14 வகை பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. முதல் தவணை ரூ.2000 மே மாதம் வழங்கப்பட்டது. இரண்டாம் தவணை 2000 ரூபாய் வழங்க அனைத்து மாவட்டங்களிலும் ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் டோக்கன் வழங்கப்பட்டது.

ஜூன் 21 முதல் இரவு ஊரடங்கு நேரம் குறைப்பு, கூடுதல் தளர்வுகள் – மாநில அரசு அறிவிப்பு!

அதன் படி சென்னை சைதாப்பேட்டை பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் இன்று இரண்டாம் தவணை 2000 ரூபாய் மற்றும் மளிகை தொகுப்புகள் வழங்கப்பட்டது. ஒரு நாளைக்கு 200 குடும்பங்கள் வீதம் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே போல் காஞ்சிபுரத்தில் மொத்தம் 3,66,000 ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு 73 கோடி மதிப்பிலான கொரோனா நிவாரண பொருட்கள், தொகைகள் வழங்கப்பட்டது. மதுரையில் 1,354 ரேஷன் கடைகளில் 8,72,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 வகை மளிகை தொகுப்பு மற்றும் நிவாரண தொகை வழங்கப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

இதேபோல் மற்ற மாவட்டங்களிலும் அனைத்து ரேஷன் கடைகளிலும் அரசின் கொரோனா நிவாரண பொருட்களும், 2000 ரூபாயும் வழங்கப்பட்டது. மக்கள் டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதியை பின்பற்றி வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் விடுபட்டவர்களுக்கு கட்டாயம் நலத்திட்டங்கள் வழங்கப்படும். டோக்கன் வாங்கியவர்களுக்கு கண்டிப்பாக நிவாரணங்கள் வழங்கப்படும். எனவே மக்கள் பொறுமையாக சமூக இடைவெளியை பின்பற்றி பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!