சம்பளம் 50% உயர்வு, அனைவர்க்கும் 2000 லிட்டர் டீசல் இலவசம் – சட்டப்பேரவையில் தீர்மானம்!

0
சம்பளம் 50% உயர்வு, அனைவர்க்கும் 2000 லிட்டர் டீசல் இலவசம் - சட்டப்பேரவையில் தீர்மானம்!
சம்பளம் 50% உயர்வு, அனைவர்க்கும் 2000 லிட்டர் டீசல் இலவசம் - சட்டப்பேரவையில் தீர்மானம்!
சம்பளம் 50% உயர்வு, அனைவர்க்கும் 2000 லிட்டர் டீசல் இலவசம் – சட்டப்பேரவையில் தீர்மானம்!

கர்நாடக சட்டப்பேரவையில் நேற்று அமைச்சர்கள் சம்பளம் மற்றும் படிகளை உயர்த்தும் மசோதா நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து முதல்வர், அமைச்சர்கள் சம்பளம் 50% உயர்வு எனவும் 2000 லிட்டர் பெட்ரோல் இலவசம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள உயர்வு:

கர்நாடக மாநிலத்தின் சட்டப்பேரவை நேற்று நடந்து முடிந்தது. இந்த சட்ட பேரவையில் விவாதம் செய்யாமலேயே இரு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் ஒன்று தான் அமைச்சர்கள் சம்பளம் மற்றும் படிகளை உயர்த்தும் மசோதா, மற்றொன்று கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் படிகள் மசோதா ஆகும். இந்த மசோதா மூலம் முதல்வர், அமைச்சர்கள் சம்பளம் 50% உயர்வாகும்

தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – பூசாரி நலவாரிய நலதிட்ட உதவிகள்!

அதன் படி இந்த மசோதா மூலம் கர்நாடக முதலமைச்சரின் சம்பளம் மாதம் ரூ.50,000-லிருந்து ரூ.75,000 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. இதேபோல் அமைச்சர்களின் சம்பளம் ரூ.40,000-லிருந்து ரூ.60,000 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. மேலும் முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கான சம்ப்ச்சுவரி கொடுப்பனவு (sumptuary allowance) ஆண்டுக்கு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.4.50 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது. மேலும், அமைச்சர்களின் வீட்டு வாடகை கொடுப்பனவு மாதம் ரூ.80,000 லிருந்து ரூ.1.20 லட்சமாகவும், குடியிருப்பு மற்றும் தளவமைப்பு மற்றும் தோட்டங்களின் பராமரிப்பு மற்றும் பிற பராமரிப்புக்கான கொடுப்பனவு மாதத்திற்கு ரூ.20,000 லிருந்து ரூ.30,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்குப் பெட்ரோல் செலவுகளுக்கு அளிக்க வேண்டிய கொடுப்பனவு அளவு வருடத்திற்கு 1000 லிட்டரில் இருந்து 2000 லிட்டராக உயர்த்தப்பட்டுள்ளது. அமைச்சர்களின் ஒரு நாள் சுற்றுலா உதவித்தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சட்டப் பேரவைத் தலைவர் பதவிகளில் இருப்பவர்களின் சம்பளம் ரூ.50,000 இருந்து ரூ.75,000 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இதேபோல் எதிர்க்கட்சித் தலைவர்களின் மாத சம்பளம் ரூ.40,000 இருந்து ரூ.60,000 உயர்த்தப்பட்டுள்ளது.

ஏப்ரல் 11 முதல் 25 வரை விமானநிலையம் மூடல் – சுற்றுலாத்துறையின் கோரிக்கை!

எம்எல்ஏ-வின் சம்பளத்தை 25,000 ரூபாயில் இருந்து 40000 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. சட்டமன்ற உறுப்பினர்களுக்கான சம்ப்ச்சுவரி கொடுப்பனவு (sumptuary allowance) ஆண்டுக்கு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது. மேலும் பயணக் கொடுப்பனவு அளவை மாதம் 60000 ரூபாயாகவும், பென்ஷன் அளவை 50000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த சம்பள உயர்வால் கர்நாடக அரசுக்கு ஒரு ஆண்டுக்கு 92.4 கோடி ரூபாய் அளவிலான கூடுதல் செலவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!